Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முறுகல்நிலை தெடர்கின்றது..
#23
P.S.Seelan Wrote:நெடுந்தீவில் கடற்படையினர் புதியமுகாம் அமைக்கலாம் குரங்கு
பாஞ்சானில் புலிகள் முகாம் இருப்பதுகுற்றமா? சீற்றத்துடன் கேட்கிறார்
சு.ப.தமிழ்ச்செல்வன்
நெடுந்தீவில் கடற்படையினர் புதிய முகாம் அமைத்தபோது, அதை அகற்றக் கண்காணிப்புக் குழுவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எமது கட்டுப்பாட்டுப் பகுதி யான குரங்குபாஞ்சானில் எமது முகாம் அமைந்திருப்பதை மட்டும் கண் காணிப்புக் குழு அகற்ற முயல்கிறது. அது எப்படி நியாயமாகும்? எமது பகுதியில் எமது முகாம் அமைந்திருப்பதை எவரும் தடுக்கமுடியாது.
- இப்படிக் கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை நேற்று முன் தினமிரவு சந்தித்தபோதே தமிழ்ச் செல்வன் மேற்கண்டவாறு கூறினார்.
நட்பு முறையில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:-எமது கட்டுப்பாட்டுப் பகுதியான குரங்குபாஞ்சான் பகுதியில் எமது முகாமைத் தொடர்ந்து வைத்திருப்ப தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அந்த முடிவில் எந்தவித மாற்றத் துக்கும் இடமில்லை. இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியில் - நெடுந்தீவில் - கடற்படையினர் புதிதாக முகாம் அமைத்தபோது, அதை நாம் எதிர்த் தோம்; கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்தோம். ஆனால், அந்த முகாமை அகற்ற கண்காணிப் புக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று எமது பகுதியில் அமைந் துள்ள முகாமை அகற்றும்படி கண்காணிப்புக்குழு எப்படிக் கேட்க முடியும்? எமது பகுதியில் எமது முகாம் அமைந்திருப்பதை எவரும் தடுக்க முடியாது.இடைக்கால நிர்வாக சபையை விடுதலைப் புலிகளுக்கு வழங்கவேண் டும் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனாலேயே, இடைக்கால நிர்வாக சபை தொடர்பான வரைவு ஒன்றை இலங்கை அரசு எமக்கு அனுப்பியுள் ளது. ஷபயங்கரவாதிகள்| என எம்மை
வர்ணித்து வந்த பல நாடுகள் கூட தற்போது அரசுக்கு அழுத்தம் கொடுத் துள்ளமையை எமக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகவே நாம் கருது கின்றோம்.
இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக அரசு அனுப்பிய வரைவை எமது சட்ட வல்லுநர்கள் ஆராய்கின்றனர். அந்த வல்லுநர்கள் வழங்கும் யோச னைகளுடன் விரைவில் அரசிற்கு எமது பதிலை நாம் அனுப்புவோம். அந்த யோசனையை ஏற்பதும் அதன் அடிப்படையில் பேச்சை மீள ஆரம் பிப்பதும் அரசின் பக்கத்திலேயே உள் ளது. இது விடயத்தில் அரசு எடுக் கும் முடிவே எதிர்கால செயற்பாடுகளைத் தீர்மானிக்கும்.
இன்றுள்ள நிலையில், எம்மைப் பலப்படுத்துவது என்பது பெரிய விவகாரமாகப் பார்க்க வேண்டிய அவசிய மில்லை. எமது பலம்தான் இன்று நாம் பேச்சுக்குப் போவதற்குக் காரணமாக அமைந்தது. எமது பலத்தைத் தொடர்ந்து நாம் கட்டி வழர்க்க வேண் டும். நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் கூட, எமது பலத்தை நாம் பேணத் தான் வேண்டும். எல்லைக் கிராமங்க ளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அந்தப்பலமே தேவை.-இப்படி அவர் கூறினார்.
நன்றி : உதயன்

நெத்தியடி என்டால் இதுதானோ?கண்காணிப்போ, கண்துடைப்புக் குழுவோ..?
அவங்கள்.. விட்டிட்டுப்.. போனாப்பிறகுதான்.. கண்துடைப்புக்குழு.. தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by Manithaasan - 07-24-2003, 10:56 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 11:47 PM
[No subject] - by Guest - 07-25-2003, 05:28 AM
[No subject] - by P.S.Seelan - 07-25-2003, 12:51 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 02:53 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:33 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 02:59 AM
[No subject] - by sethu - 07-26-2003, 07:52 AM
[No subject] - by P.S.Seelan - 07-26-2003, 12:36 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 01:59 PM
[No subject] - by sethu - 07-27-2003, 04:53 AM
[No subject] - by P.S.Seelan - 07-27-2003, 12:40 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 03:13 PM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 03:30 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:35 PM
[No subject] - by GMathivathanan - 07-27-2003, 03:38 PM
[No subject] - by sethu - 07-27-2003, 03:39 PM
[No subject] - by P.S.Seelan - 07-29-2003, 01:02 PM
[No subject] - by GMathivathanan - 07-29-2003, 01:36 PM
[No subject] - by sethu - 07-29-2003, 01:57 PM
[No subject] - by P.S.Seelan - 08-02-2003, 12:55 PM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 03:38 PM
[No subject] - by P.S.Seelan - 08-03-2003, 01:04 PM
[No subject] - by GMathivathanan - 08-03-2003, 02:04 PM
[No subject] - by P.S.Seelan - 08-04-2003, 12:34 PM
[No subject] - by GMathivathanan - 08-04-2003, 01:44 PM
[No subject] - by P.S.Seelan - 08-06-2003, 12:51 PM
[No subject] - by GMathivathanan - 08-06-2003, 01:14 PM
[No subject] - by P.S.Seelan - 08-07-2003, 01:03 PM
[No subject] - by Mathivathanan - 08-09-2003, 06:53 PM
[No subject] - by P.S.Seelan - 08-09-2003, 07:18 PM
[No subject] - by sethu - 08-10-2003, 08:38 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 12:49 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:06 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:23 AM
[No subject] - by P.S.Seelan - 08-12-2003, 12:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)