Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR)
#2
<b>வடக்குக்கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள்</b>

<b>அரசியல் உரிமைகள் </b>

1.1 எல்லா மனிதர்களுக்கும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடவும் தங்களது அரசியல் அபிலாசைகள், சமய நம்பிக்கைகள் உட்பட மனச்சாட்சியில் சரியெனப்பட்டவற்றைத் தெரிவிப்பதற்கும்,

1.2 எல்லா மனிதர்க்கும் சுதந்திரமாக தங்கள் கருத்தையும் நம்பிக்கையையும் தடையின்றி வெளிப்படுத்துவதற்கும்

1.3 எல்லா மனிதர்க்கும் சமாதானமாகக் கூடுவதற்கும் அந்நியோன்னியமாக மற்றவர்களுடன் பழகுவதற்கும்

1.4 எல்லா மக்களும் சுதந்திரமாகத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும்

1.5 எல்லா மனிதர்களும் அரசியலில் பங்குகொள்வதற்கும் அரசியல் கட்சிகளில் இணைவதற்கும் தடையற்ற வகையில் பிரசாரம் செய்வதற்கும்

1.6 காலத்துக்குக் காலம் நடைபெறும் தேர்தல்களில் தாம் விரும்பிய அரசைத் தெரிவு செய்வதற்கும் ஒவ்வொரு மனிதர்களும் தடையற்ற தகுதி பெற்றவர்கள்.

1.7 எல்லா மனிதர்களும் அரச சேவையில் இணைவதற்கும் பதவிகளில் தெரிவுசெய்யப்படுவதற்கும்

1.8 எல்லோரும் அரச அலுவலர்களுடன் தங்கள் குறைகள் தொடர்பில் பரிகாரம் தேடுவதற்கும் மனுவை சமர்ப்பிப்பதற்குமான உரிமை பெற்றவர்கள்.



<b>உறுதிப்படத்தப்பட்ட பெண்கள் உரிமைகள் </b>

2.1 ஆண்களுக்குச் சமமாக கணிக்கப்பட பெண்களுக்கு உரிமையுண்டு

2.2 ஆண்களைப் போன்ற தரத்துடன் ஒத்த அல்லது சமனான நிலைப்பாட்டில் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ள பெண்களுக்கும் ஆண்களைப்போன்றே ஊதியம் பெற உரிமையுண்டு.

2.3 திருமணத்திலும் பெண்கள் சமமான உரிமையுடையவர்களே.

2.4 சகல வடிவங்களிலும் காணப்படும் சுரண்டுதல்களிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு பெண்கள் உரித்துடையவர்கள்

2.5 பெண்கள் தொழில் புரியும் காலத்தில் பிள்ளையைப் பிரசவிப்பதற்கு முன்பும் பின்பும் நியாயமான காலத்திற்கு சம்பளத்துடன்கூடிய விடுப்பைப்பெற உரித்துடையவர்கள்



3. <b>உறுதிப்படுத்தப்பட்ட சிறுவர்களின் உரிமைகள்</b>

3.1 எல்லா சிறுவர்களும் பெயரை வைத்துக்கொள்வதற்கு உரித்துடையவர்கள்.

3.2 திருமணப் பிணைப்பில் பிறந்த பிள்ளைகள் அனுபவிக்கும் உரிமைகள் அவ்வாறற்ற பிள்ளைகளுக்கும் உண்டு.

3.3 தொடக்கக் கல்வியை பெறுவதற்கான வழிகளையும் இலவச, கட்டாய ஆரம்பக் கல்வியை உள்ளடக்கிய கல்வியை பெறுவதற்கும் உரித்துடையவர்கள்.

3.4 தொழில் முறைப் பயிற்சிகளையோ ஏனைய தொழில் பயிற்சிகளையோ இலவசமாகப் பெறுவதற்கு உரித்துடையவர்கள்.

3.5 கைது செய்யப்படும் சிறார்களுக்கு புனர்வாழ்வு கோருவதற்கு உரிமையுண்டு.

3.6 புறக்கணிப்பில் இருந்தும் கொடுமைகளில் இருந்தும் சுரண்டல் நிலைகளிலிருந்தும் தங்களைப் பாதுகாப்பதற்கான உரிமையுடையவர்கள்.

3.7 சிறுவயதில் வேலைக்கமர்த்தப்படுவதிலிருந்து விடுபடும் உரிமையுடையவர்கள்.

3.8 விளையாட்டுக்களிலும் பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் வாய்ப்புப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.

3.9 எல்லா சமூக சேவைகளை ஆற்றுவதற்கும் உரிமையுடையவர்கள்.

3.10 சிறுவர்களுக்குத் தங்கள் எண்ணங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப வெளிப்படுத்துவதற்கு உரிமையுண்டு. இவை சுதந்திரமான தேடுதல் செய்யவும் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கும் பலவிதமான எண்ணக் கருக்களைப் பெறுவதற்கும் எந்த நிலையிலும் விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கும் அவற்றை வாய்மூலமாகவோ, எழுத்துவடிவத்திலோ, வர்ணம் தீட்டல் மூலமோ படம் வரைதல் வாயிலாகவோ அல்லது வேறு சிறுவர்களுக்கான ஊடகங்கள் மூலமோ வெளிப்படுத்த முடியும்.

3.11 இராணுவ சேவையிலோ அல்லது இராணுவப் பிரிவிலோ அல்லது போரிடும் குழுவிலோ இணைக்கப்படாமல் இருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமையுண்டு.

நன்றி தமிழ்நாதம்
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 12-07-2004, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)