Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR)
#1
<b>வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்
NorthEast Secretariat on Human Rights (NESOHR) </b>


வடகிழக்கு மனித உரிமைகளுக்கான செயலகம் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கூட்டு உடன்படிக்கை, இன ரீதியான பாரபட்சத்தின் அனைத்து வடிவங்களையும் இல்லாதொழிப்பதற்கான அமைப்பு, மனித உரிமைகள் தொடர்பான ஏனைய கருவிகள் ஆகியவை எமது மக்களுக்கு எதிரான வன்;;முறையைக் குறைப்பதற்கு பயன்விளைவுள்ள வகையில் பங்களிப்புச் செய்யவில்லை என்பதை உணர்ந்து, தேசிய சர்வதேச ரீதியில் மனித உரிமைகள்;, அடிப்படைச் சுதந்திரங்கள் என்பவை தொடர்பான அறிவை மேம்படுத்தவும் அவற்றுக்கு மதிப்பளிக்கவும் தனிநபர், குழுக்கள், நிறுவனங்களுக்கு இருக்கும் உரிமையையும் பொறுப்பையும் மனதில் ஏற்று வடக்குக் கிழக்கிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் உருவாக்கப்பட்டது.

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் NESOHR வடகிழக்கிலுள்ள அனைவரதும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தலை நோக்கமாகக் கொண்டது.

<i>அதன் செயற்பாடுகள்:</i>

Idea மனித உரிமை மீறல்கள் தொடர்பான சான்றுகளைச் சேகரிப்பதுடன் அவை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்கும், ஆவணப்படுத்துவதற்குமென இடம் பெயர்ந்தோர் வாழும் முகாம்கள், தடுப்புக் காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் போன்றவற்றுக்கு செயலாய்வுக் குழுக்களை அனுப்பும்.

Idea வடகிழக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவசர மேல் முறையீடுகள், பத்திரிகைத் தகவல்கள், அறிக்கைகள், வெளியீடுகள் போன்றவற்றை விநியோகிக்கும்.

Idea தேசிய சர்வதேசிய ரீதியிலான வெளியீடுகள், மாநாடுகள், கருத்தரங்குகள், கல்விச் சுற்றுலாக்கள், போன்றவற்றினு}டாக தனிநபர்கள், குழுக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கி அவற்றை வளர்த்தெடுக்கும்.

Idea தகவல்களைப் பெறும்பொருட்டு பரஸ்பர ரீதியில் நன்மையளிக்கும் கூட்டுறவை விருத்தி செய்வதற்கும், வடகிழக்கில் மனித உரிமைக் கலாச்சாரத்தை மதிக்கவும் வளர்த்தெடுப்பதற்குமான செயற்பாட்டை ஆரம்பித்து வைப்பதற்கும் தேசிய சர்வதேசிய அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பை உருவாக்கும்.

செயலகம் உங்களுக்கு எப்படி உதவும்?

Arrow எல்லா மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களையும் ஆய்வு செய்தல்

Arrow இலவச சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல்

Arrow உங்களுக்குத் தேவையான மனித உரிமைகளின் பாதுகாப்பை விசாரித்தறியும் மனிதத்துவத்தை மதித்தல்

Arrow மனித உரிமைகள் பற்றிய கல்வியை வழங்கல்

NESOHR பட்டாயத்தின் மூல ஏற்பாடுகள்

இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் வாழுகின்ற எல்லா மக்களது உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் நிசோர் அமைப்பு கடப்பாட்டைக் கொண்டுள்ளது. சர்வதேச மனித உரிமை பிரகடனம், சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பாளர்கள், ஆபிரிக்க நாட்டின் மனித உரிமைகள் பிரகடனம், பெண்களுக்கெதிரான எல்லாவகையான பாகுபாடுகளையும் ஒழிக்கும் மாநாடு, சிறுவர்களின் உரிமைகளுக்கான மாநாட்டு கருத்துக்களையும், ஐ.நா.வின் குறைந்த அளவிலான கைதிகளின் பராமரிப்பு விதிகளையும் தனது பட்டயத்தில் கொண்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் நல்ல நோக்கத்திற்கான சூழ்நிலையிலும் அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்படவோ, செயலிழக்கப்படவோ மாட்டாது. மேலும் மனித உரிமைகள் செயலகம் வடக்குக் கிழக்கில் வாழும் சுதந்திர வேட்கைகொண்ட ஒவ்வொருவரினதும் குடியியல் உரிமைகளை நம்பிக்கையுடனும் எந்த மரியாதையுடனும் பற்றிநிற்கிறது.

குடிசார் அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் போன்ற அடிப்படை உரிமைகள் உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளை பாதுகாக்கும் அம்சங்களை மனித உரிமைகள் பட்டயம் உள்ளடக்கியுள்ளது. சிறுவர், பெண்கள் போன்ற குறிப்பிட்ட வகையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியையும் தம் வேலைத்திட்டத்தில் அடக்கியுள்ளது. அரசியல் உரிமைகள் மட்டுமல்லாது பெண்கள், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் தனது அவசர வேலைத்திட்டத்தில் கொண்டுள்ளது.
Reply


Messages In This Thread
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) - by Kanani - 12-07-2004, 02:50 PM
[No subject] - by Kanani - 12-07-2004, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)