12-07-2004, 12:11 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/face.jpg' border='0' alt='user posted image'>
<b>ஓர் கணம்
என் உயிர்க்குலை அதிர்ந்தது
என்னை நானே
ஸ்பரிசித்துப் பார்த்தேன்
உடலோடு உயிர் இருக்கோ என்று
இருக்கிறது என்றதும்
இதயத் துடிப்பை தடவிப் பார்த்தேன்
சாதாரணமாகத் துடித்தது
பதட்டமே இல்லாமல்
மனம் மட்டும் பதறியது போல்....!
காரணம்...
சடைகள் அவிழ்த்து
சவரி முடி பறக்கவிட்டு
பவளப் பற்கள் கோரமாக
கொவ்வையிதழ் குருதி சொட்ட
நீண்ட நகங்களில் இரத்தம் காய
கண்கள் கொப்பளிக்க
இரத்தம் தோய்ந்த புடவை கட்டி
கோரமாய் அவள்
என் உயிர் குடிக்கும்
பிசாசாய் கண்ணாடியில்....!
நேற்றுவரை அவளுக்காய்
நான் அலங்கரிக்க
பார்த்துப் பார்த்து தேய்ந்து போன
அதே கண்ணாடியில்
இன்று அவள்
உண்மை முகம்....!
நேற்றுவரை என்னை அலங்கரித்தவள்
இன்று....
இன்னொருவனை அலங்கரிக்க
நான் அலங்கோலமானேன்
மனதோடு....
அவளைச் சுமந்ததால்....!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<b>ஓர் கணம்
என் உயிர்க்குலை அதிர்ந்தது
என்னை நானே
ஸ்பரிசித்துப் பார்த்தேன்
உடலோடு உயிர் இருக்கோ என்று
இருக்கிறது என்றதும்
இதயத் துடிப்பை தடவிப் பார்த்தேன்
சாதாரணமாகத் துடித்தது
பதட்டமே இல்லாமல்
மனம் மட்டும் பதறியது போல்....!
காரணம்...
சடைகள் அவிழ்த்து
சவரி முடி பறக்கவிட்டு
பவளப் பற்கள் கோரமாக
கொவ்வையிதழ் குருதி சொட்ட
நீண்ட நகங்களில் இரத்தம் காய
கண்கள் கொப்பளிக்க
இரத்தம் தோய்ந்த புடவை கட்டி
கோரமாய் அவள்
என் உயிர் குடிக்கும்
பிசாசாய் கண்ணாடியில்....!
நேற்றுவரை அவளுக்காய்
நான் அலங்கரிக்க
பார்த்துப் பார்த்து தேய்ந்து போன
அதே கண்ணாடியில்
இன்று அவள்
உண்மை முகம்....!
நேற்றுவரை என்னை அலங்கரித்தவள்
இன்று....
இன்னொருவனை அலங்கரிக்க
நான் அலங்கோலமானேன்
மனதோடு....
அவளைச் சுமந்ததால்....!</b>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

