12-07-2004, 11:23 AM
<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->வரவேற்கக்கூடிய விடயம்தான்....ஆனால் இவர் வாய்திறந்திருப்பது எங்கே?
நம்மூரில் வந்து வாய்திறந்து என்ன பயன்
தமிழ்நாட்டில் வாய்திறக்க முடியுமா? அல்லது
முயற்சிதான் செய்வார்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்கள் பார்வையில் மாற்றம் வேண்டும் கணணி... இப்போ அவர்கள் இங்கே வராது ஈழத்தின் உண்மையை தரிசிக்காது விட்டிருந்தால் தமிழக மக்கள் மத்தியில் இவர்களின் குரல் ஆதீபன் சொல்வது போல பழைய பல்லவியாகத்தான் இருக்கும் இல்ல மெளனமாகவே இருந்திருக்கும்....! அது யாருக்கு உதவி இருக்கும்...???! சிங்கள அரசுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் கருணா டக்ளஸ் சங்கரிக்கும்... பிற இன்னோரென்ன உங்கள் மண்ணின் "பெருமைக்குரிய" கொலைஞர்களும் துரோகிகளும் இந்திய மண்ணில் சனநாயகவாதிகளாக அடைக்கலம் தேடவும்... அவர்களின் வாதங்களை நியாயமாகக் காட்டவும்...!
அது சாதாரண மக்களான எமக்கும் பிரயோசனம் இல்லை தமிழக மக்களுக்கும் பிரயோசனம் இல்லை....!
உண்மையில் ஈழத்தமிழர் ஆதரவாளர் என்று காட்டப்பட்டு விட்ட திருமாவளவனின் குரலை விட பாரதிராஜாவின் தொனியின் மாற்றம் கூர்ந்து கவனிக்கப்படும்.... உண்மையில் தமிழக பாமர மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டின் ஈழத்தில் யதார்த்தத்தை தரிசித்து யதார்த்தமாக அதை வெளிவிடவேண்டும்....இப்போ ஜெயலலிதாவின் பார்வையில் கடற்புலிகள் இந்திய எதிர்ப்புத் தீவிரவாதிகள் என்று தெரிவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல....ஆனால் அதையே மீனவ மக்களுக்கும் சொல்லி மக்கள் மத்தியில் குழப்பக் கருத்தை விதைத்து இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையே மோதலை உருவாக்கி இரு பகுதி மக்களினதும் ஒற்றுமையைக் குலைக்க விளைந்தார்... அதை முறியடிக்கும் வகையில் சமீபத்தில் கடற்புலிகளை சம்பந்தப்படுத்தி சிறீலங்கா கடற்படை நடத்திய நாடகத்துக்கு எதிராக பிபிசிக்கு பேட்டி அளித்த தமிழக மீனவ சங்கத் தலைவர் சிங்கள அரசினதும் அரச படைகளினதும் செய்திக்கும் அதற்கு தாளம் போடும் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கும் எதிரானதாக தனது கருத்தை துணிந்து சொன்னார்.... காரணம் என்ன.... இங்கு வந்து அவர் நிலைமைகளை அவதானித்துச் சென்றதன் விளைவே.....!
இது மட்டுமல்ல அன்றும் இந்திய இராணுவத்தின் காலத்தில் வைகோ நெடுமாறன் போன்றவர்களின் ரகசிய ஈழ விஜயங்களே பெரும் பரபரப்பையும் உண்மைகளையும் தமிழகத்துக்குக் கொண்டு சென்றது என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தைரியத்தையும் கொடுத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது....!
திருமாவளவன் வன்னியின் பேசியதை விட தெற்கில் பாராளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமரருடன் பேசி தமிழர்கள் பக்க கோரிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை நேரடியாகச் சொல்லி இருப்பது ஈழத்தின் நிறம் கூட அறியாது சிங்கள அரசுக்கு துணை போகும் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான துணிந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட வாய்ப்பளித்துள்ளது....! இவரைத் தொடர்ந்தே பாரதிராஜாவின் குரல் துணிந்து முன்வைக்கப்பட்டுள்ளது...!
இப்போ பொடா பாவனையில் இல்லை.... ஆனால் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் விரோதக் கொள்கையும் அதை நடைமுறைப்படுத்தும் அவரின் பொலீஸ் படையும் இவர்களின் குரல்கள் சுதந்திரமாக தமிழகத்தில் ஒலிக்க இடமளிக்குமா என்பது கேள்விக் குறியே எனவே இவர்கள் ஈழத்தில் சொல்லும் கருத்து அங்கு எதிரொலிக்கும்.... அதுபோதும் ஜெயலலிதா கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாத சுயநல அரசியல் சாக்கடை முதலைகளின்... பார்பர்னிய ஆதிக்க பத்திரிகைகளின் பொய்ப் பிரச்சார தொனியை சிறுகச்சிறுக கலங்கடிக்க.....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>