12-07-2004, 07:16 AM
சமீபத்தில் இலங்கை வந்த இந்தியமீன்பிடித்தொழிலாளர்களின் பிரதிநிதி ஆனந்தவிகடனில் செவ்விகொடுத்திருந்தார். அதில் இலங்கை மீனவர்கள் படும் கஸ்டத்தை விவாித்திருந்தார். அதற்கு முன் இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கினார்கள் என்றுதான் செய்தி இங்கே பத்திாிகைகளில் வரும். அவரது செவ்வியில் அவர் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிச்சென்று மீன்பிடிப்பதை கூறியிருந்தார். அது மட்டுமன்றி இலங்கை மீனவர்கள் எப்படி இலங்கை கடற்படையினரால் நடத்தப்படுகிறார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது பொதுமக்கள் இடையே தினசாிப்பத்திாிகைள் ஏற்படுதுத்தி இருந்த தவறான ஒரு கருத்தை மாற்றிவிட்டது.

