12-06-2004, 11:50 PM
ஆதிபன் ! உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழீழத்தின் பாலும் , தமிழீழத்திற்கான குரலும் தமிழகத்து சினிமாவுலகையும் , அங்குள்ள கலைஞர்களையும் எங்கள் பக்கம் ஈர்த்திருப்பது ஏதோ உண்மைதான். இதில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் எங்களது போராட்டத்தை , போராடும் நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக யாரும் தமிழீழம் என்ற தேசத்தையோ , தமிழீழத்தமிழர்களில் கரிசயையுடனோ இல்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு அடைக்கலம் தந்த இந்தியா என்பதற்காக ஆலோலம் பாடுவது பொருத்தமல்ல)
மணிரத்தினம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழத்தவருக்காகவா இரக்கத்தை வாங்கித் தந்தவர் ? இல்லையே தனது வியாபார வளத்தையும் பெருக்கி ,போராளிகள் என்பவர்களைப் பயங்கரமானவர்களாகவே சித்தரித்திருந்தார். ஆனால் கலைஞர்களைப் பாருங்கள் என்று கூச்சலிடுவோர்க்கு அந்தப்படம் கலையே தவிர தமிழனின் கண்ணீரின் கனம் விளங்கவில்லை. நீங்கள்கூட சினிமாவே தமிழரின் வாழ்வென்று நினைக்கிறீர்கள் போல.
தெனாலியில் கமல் செய்த நாசமும் அப்துல்கமீத் என்ற மனிதரால் நமது வட்டார வழக்கு மட்டும் கொச்சைப்படுத்தப்படவில்லை , ஈழத்தவன் என்றாலே இழக்காரமாகத்தான் அந்தப்படம் சித்தரித்தது ஈழத்தவரை.
இதுவரை தமிழர் தேசம் வெற்றி கொண்டதெல்லாம் இந்த சினிமாக்கொட்டகைகளால் வென்றவையல்ல. ஈழத்தவனை வைத்து எப்படி வியாபாரம் நடாத்தலாமென்றே கனவுடன் ஈழத்தவரை எட்டிப்பார்க்கும் சினிமாக்கூட்டம். குறிப்பிட்ட சில சினிமாக்காரர்களும், இயக்குனர்களும் எங்களை நேசிக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் தென்னிந்திய சினிமாவுலகிலுள்ளவர்கள் எங்களது போராட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது தமிழீழத்தையே பெற்றுத்தருவார்கள் என்ற உங்கள் அறியாமைத்தனம்மிக்க சிந்தனையை என்ன செய்வது ?
குப்புசாமியென்ற கிராமியப்பாடகரும், அனிதா குப்புசாமியென்ற பாடகியும் ஈழத்தவர்களால் ஈழத்துக்குள்ளும், உலகத்திற்கும் வெளிச்சத்துக்கு வந்தார்கள். ஆனால் அம்மாவின் ஆசியில் கிராமிய இசைத்துறையையே வென்றோம் என்றும் சொன்னார்கள். தற்போது குப்புசாமியைக் கேட்டுப்பாருங்கள் ஈழத்தமிழர்களை ஞாபகமிருக்கிறதா என்று ?

:::: . ( - )::::