12-06-2004, 07:13 PM
பிரித்தானியாவின் இலண்டன் அரோவ் பகுதியில் அமைந்திருந்த பிரபல தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பிரித்தானியப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதால் 15000 ஈழத்தமிழ் உறவுகள் நிர்க்கதியாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மேற்படி சட்டத்தரணிகள் நிறுவனம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களுக்குரிய தமிழ் சட்ட ஆலோசனைக்காக பிரித்தானிய அரசால் வழங்கப்படும் பணத்தைத் தவறாகக் கையாண்டதுடன் பல மில்லியன் பவுண்டுகளை வருமானமாக சட்டரீதியற்ற முறையில் திரட்டியதாகப் பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்படி தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனத்தில் கடமையாற்றியவர் ஒருவர் கொடுத்த இரகசியமான தகவலையடுத்தே இந்த நிறுவனம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவராகத் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் சட்டத்தரணிகள் நிறுவன உரிமையாளர் தமிழ்த்தேசியத்திற்குப் பங்களிப்புச் செய்பவர் போன்ற ஒரு மாயை பலர் மத்தியில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தில் சுமார் 6000 ஈழத்தமிழர்களின் அகதிகள் தொடர்பான கேவைகள் மட்டும் இருந்ததாகவும் சுமார் 10000 க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை வைத்திருந்ததாகவும் சொத்து முதலீட்டாளராகவும் அண்மைக் காலத்தில் தன்னை விஸ்தரித்துக் கொண்டவர் என்றும் தெரியவருகிறது. தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனங்களில் அதிக கோவைகளை வைத்திருந்த பிரபல முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர்;; வடமாரட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொன்டவரும் பிரபல ஆசிரியர் ஒருவரின் மகனும் ஆவார்.
********
இந்தச் செய்தி தொடர்பாக இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கெட்டபோது தமிழ்த் தேசியத்திற்கு எந்தவிதமான பங்களிப்பும் செய்யாத நிறுவனம் பாரிய பங்களிப்புச் செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி மிகவும் மகிழ்ச்சியைத் தந்ததாகவும் தெரிவித்தார்.
இவருடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிதிக்கணக்குகளில் உள்ள மிகப்பெரும் முரண்பாடுகளும் வியாபாரப் போட்டியுடன் கூடிய இனப்பாகுபாடுமே காரணம் என்று தெரியவருகின்றது.
© 2004 Niவாயசளயயெஅ.உழஅஇ யுடட சiபாவள சநளநசஎநன