12-06-2004, 11:38 AM
நல்ல செய்திதான். ஆனால் வாய்திறக்க பலர் பயப்பிடுகின்றனர். இதற்கு காரணம். ஜெயலலிதா அரசு. இரண்டாவது விடுதலைப்புலிகள் மேல் உள்ள தடைச்சட்டம்.
திரைப்படத்துறைக்கு எதிராக ஜெயலலிதா அவர்கள் செயற்பட்டார். அதற்குக்காரணம் அவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு போன்ற ஒரு நிலை இருந்ததால். அதன்பின் அவர்கள் நேராக சென்று குறைகளைக்கூறியபின் அவர்களுக்கு பல சலுகைகள் செய்து கொடுத்துள்ளாார் அம்மா. இதற்காக அவரைப்புகழ்ந்து திரைத்துறையினர் ஒரு பராட்டுவிழாக்கூட நடத்தினர்.
நாமும் ஒருவருக்கு ஆதரவு ஒருவருக்கு ஆதரவு இல்லை என்ற நிலையை மாற்றவேண்டும். இலங்கையில் இருந்து ஒரு குழு இங்கு வந்து அம்மையாரைச்சந்தித்து எம்ஜிஆருக்கும் எமக்கும் உள்ள உறவைக்கூறி மீண்டும் உறவைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டும். இதனால் பல நன்மைகள் கிட்டும். துணிச்சல் வாய்ந்த ஒரு அரசியல் வாதியின் ஆதரவு உதவியாக இருக்கும். கருணாநிதியால் என்ன கண்டோம். வைக்கோதான் அடிக்கடி டெல்லி சென்று இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கெதிராக குரல் கொடுக்கிறார். அவரது ஆதரவு மட்டும் போதுமா எல்லோரிடமும் ஆதரவுகோரலாம். இராஜதந்திரத்தின் மூலம்தான் இந்தியாவை வெல்லமுடியும். எமக்கு ஆதரவாக ஒரு மாநில மக்கள் இருக்கிறார்கள் என்று இந்தியா பயப்பிட வேண்டும். ஏற்கனவே மக்கள் எமது பக்கம் தான் அதில் சந்தேகம் இல்லை. அரசியல் வாதிகளை எமது பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.