Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒப்பந்தத்துக்க எதிராக புலம்பெயர்ந்தமக்கள் பொங்கி எழவேண்டும்
#1
இந்திய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக
புலம்பெயர்ந்த மக்கள் பொங்கி எழவேண்டும்
பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு மற்றும் மாவீரர் தினம் ஆகிய தமிழீழத் தேசிய நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் காண்பித்த எழுச்சியைக் காட்டி இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ள உத்தேசித்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிலுள்ள ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை ஈழத் தமிழர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது -

'தமிழ் மக்கள் எல்லா நாடுகளிலும் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி இலங்கையுடன் செய்துகொள்ள உத்தேசித்துள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தக்கோரி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் து}தரகங்களில் மகஜர்களைக கையளித்து தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த விடயத்தில் உள்ள காத்திரத்தை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு சமாதானம் என்ற பெயரில் இலங்கை அரசு போடும் இரட்டை வேடத்தையும் தெரிந்து கொள்ளும். வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யும் இந்த பேரணிகளுக்கு அங்குள்ள இந்திய நிறுவனங்கள் கடைகள் அரசு சாரா அமைப்புக்கள் கழகங்கள் இந்தியாவின் பல்வேறு சமூகங்கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம்.

'இதேவேளை தென்னிந்தியத் திரைப்படத் துறையினரிடமும் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கோரவேண்டும். தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள ஈழத் தமிழர்களால் பலகோடி ரூபா பணம் பெரும் லாபமாக் கிடைக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது அவர்களது ஊதியத்துக்கு ஈழத் தமிழர்களது பங்கு மிகப்பெரியது. ஆகவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனஅழிப்பு நடவடிக்கைக்கான உதவியை இந்திய அரசு மேற்கொள்ள அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

'பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்ட தமது நாட்டுப் படையினருக்கு உதவி செய்ய காலை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்துக்கொடுத்த தென்னிந்தியத் திரையுலகம் தமது அரசின் நடவடிக்கையால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்கள் பாதிக்கப்படும் இந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தமது நியாயமான கரிசனையைக் காண்பிக்க வேண்டும். நேரடியாக அல்லது தமிழ்நாடு அரசின் ஊடாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

'மக்கள் சக்தியால் மட்டுமே இந்த முற்தடுப்பு நடவடிக்கையை செம்மையாக செய்துமுடிக்கலாம்."
நன்றி: புதினம்.கொம்

எனது கருத்தக்கள்:
அப்படி திரைப்பட துறையினர் செய்யத்தவறின் அவர்களது திரைப்படங்களை தமிழீழத்தமிழர்களின் திரையரங்கு களிலிருந்த புறக்கணிக்க வேண்டும். அது மட்டு மன்றி தமிழ் நாட்டு ஊடகங்கள் முதல் இந்தியாவின் அனைத்து ஊடகங்களுக்கும் உங்கள் எதிர்ப்பைக் காட்டி மின்னஞ்சல் செய்யுங்கள். பாதுகாப்பு ஒப்பதம் என்ற போர்வையில் இன்னோரு முறை இந்தியா ஈழத்தமிழர்களின் விடையத்தில் தவறான வழியில் நுழைவதைத் தடுக்க வேண்டும் எனவே நண்பர்களே! இன்றே ஆரம்பியுங்கள் உங்கள் எதிர்பு நடவடிக்கைகளை சிறு துளிகள் பெரும் வெள்ளமாகும்.. வெள்ளத்தை எதிர் கொள்ள இந்தியா விரும்பாது அதே போல தனது சமாதான திரை கிழிய சிறீலங்காவும் விரும்பாது எனவே நாங்கள் எதிர்போம்........
வெற்றிகள் எமதாகட்டும்...

-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஒப்பந்தத்துக்க எதிராக புலம்பெயர்ந்தமக்கள் பொங்கி எழவேண்டும் - by Nitharsan - 12-05-2004, 07:03 AM
[No subject] - by aathipan - 12-05-2004, 11:41 AM
[No subject] - by shiyam - 12-05-2004, 01:38 PM
[No subject] - by Nitharsan - 12-06-2004, 06:00 PM
[No subject] - by sri - 12-07-2004, 04:06 AM
[No subject] - by paandiyan - 12-07-2004, 05:21 AM
[No subject] - by MEERA - 12-07-2004, 12:27 PM
[No subject] - by Nitharsan - 12-07-2004, 06:40 PM
[No subject] - by MEERA - 12-07-2004, 08:53 PM
[No subject] - by MEERA - 12-07-2004, 08:55 PM
[No subject] - by MEERA - 12-07-2004, 08:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)