Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு பிரேமானந்தா...!
#16
நன்றி குருவிகளே, இந்த படத்தின் part 2 இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது , வாழ்க எங்கள் சமுதாயத்தின் மூட நம்பிக்கை,

<b>சாமியார் வேடத்தில் இலங்கைக்குள் புகுந்த
இந்திய ஆசாமி பாலியல் குற்றச்சாட்டில் கைது!</b>

இந்தியாவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ள சாமியார் பிரச்சினை இலங்கைக்கும் பரவிவிட்டது. வருங்காலத்தின் பலாபலன்களை சரியாகக் குறிப்பறிந்த சொல்வதாகக் கூறிக்கொண்டு இலங்கைக்கு வந்து 'திருவிளையாடல்" புரிந்த இந்தியாவைச் சேர்ந்த கள்ளச்சாமியார் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் சாஸ்திரி என்ற இந்தச் சாமியார் ஒருவரது ஜோதிடம் இல்லாமல் அவரது படத்தை வைத்தே பூர்வீகமும் சொல்லக்கூடியவர் எனப் பிரபலமானவர் என்று தெரியவந்துள்ளது.

'எதிர்கால பலன்கள் பிரகாசமான வாழ்கைக்கு என்ன செய்யவேண்டும் பரீட்சையில் சித்தி ஆகியவற்றுக்கு வழிகாட்டுகிறேன் வாருங்கள்" என்று இலங்கையின் பிரபல பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்து இலங்கையின் பிரபல ஹோட்டல் அறையொன்றைத் தனது 'தொழிலிடமாக" பயன்படுத்தி வந்துள்ளார் இந்தக் கள்ளச் சாமியார். இவரிடம் ஜோதிடம் பார்க்கச் செல்வதானால் தொலைபேசியிலில் தொடர்புகொண்டு முற்பதிவை மேற்கொள்ளவேண்டும். இதற்கு 1,200 ரூபா அறவிடுவார். பின்னர் ஜோதிடச் செலவு வருபவர்களின் வருமானத்தைப் பொறுத்து 10 ஆயிரம் ரூபா முதல் முதல் 20 ஆயிரம் ரூபா வரை அறவிடுவாராம்.

தன்னிடம் வரும் பெண்களை தமது நண்பர்கள் அல்லது உறவினருடன்தான் வரசச் சொல்வாராம். அவர் பூஜையை ஆரம்பித்தவுடன் அவர்களையும் தனது மொழிபெயர்ப்பாளர்களையும் வெளியே அனுப்பிவிடுவாராம். அதன் பின்னர் எலுமிச்சைம்பழத்தை பெண்களின் வயிற்றில் தேய்ப்பாராம். அதன்பின்னர் வல்லுறவுக்கு முயற்சி செய்வாராம்.

இவரிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற பெண்ணொருவர் தன்னை சாமியார்; பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டார் என்று கொம்பனி வீதி பொலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதை அடுத்து உஷாரான பொலிஸார் தந்திரமாகக் காய்களை நகர்த்தினர். பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பிரஸ்தாப சாமியாரிடம் சாத்திரம் கேட்பவர்போல அனுப்பத் திட்டமிட்டனர். அதன்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சாமியார் இருந்த குறிப்பிட்ட ஹோட்டல் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே தமது குழுவுடன் தயாராக நின்றனர். உள்ளே சென்ற பெண் பொலிசிடமும் - ஆள் யாரெனத் தெரியாமல்; தனது 'வழமையான திருவிளையாடலை" காண்பிக்க முயற்சித்துள்ளார் சாமியார். வெளியே ஆயத்தமான நின்ற தனது குழுவினருக்கு பெண் பொலிஸ் தக்க தருணத்தில் தகவல் கொடுக்க அறையினுள் பாய்ந்த பொலிஸார் சாமியாரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே ஒரு தொழிலதிபரின் மனைவி மற்றும் இராணுவ உத்தியோகத்தரின் மனைவி ஆகியோர் மீதும் இவ்வாறு நடந்துகொள்ள முயற்சித்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொம்பனி வீதிப் பொலிஸார் சாமியாரை கொழும்பு கோட்டை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர். இவரை 6 நாள் பொலிஸ் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் அண்மையில் ஜெயந்திரர் சுவாமிகள் கொலைக் குற்றச்சாட்டின் பேரிலும் சதுர்வேதி சுவாமிகள் என்பவர் பாலியல் குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

www.puthinam.com
Reply


Messages In This Thread
õõ.. - by Danklas - 12-03-2004, 12:35 PM
[No subject] - by குத்தூசி - 12-03-2004, 12:37 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 12:55 PM
Re: õõ.. - by kuruvikal - 12-03-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 12-03-2004, 02:30 PM
[No subject] - by KULAKADDAN - 12-03-2004, 03:38 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 04:41 PM
[No subject] - by shiyam - 12-03-2004, 05:58 PM
[No subject] - by vasisutha - 12-03-2004, 07:54 PM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:08 PM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:10 PM
[No subject] - by shiyam - 12-04-2004, 04:33 AM
[No subject] - by hari - 12-05-2004, 05:51 AM
[No subject] - by hari - 12-05-2004, 05:52 AM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 08:36 AM
[No subject] - by hari - 12-05-2004, 10:31 AM
[No subject] - by tamilini - 12-05-2004, 12:57 PM
[No subject] - by shiyam - 12-05-2004, 01:23 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 01:31 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 02:04 PM
[No subject] - by KULAKADDAN - 12-05-2004, 05:54 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:31 PM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 06:42 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 06:52 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:53 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:59 PM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 07:07 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 07:11 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 07:45 PM
[No subject] - by paandiyan - 12-06-2004, 06:07 AM
[No subject] - by tamilini - 12-06-2004, 12:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)