Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னுமொரு பிரேமானந்தா...!
#1
<img src='http://www.thatstamil.com/images25/chaturvedi3-300.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/chaturvedhi4-200.jpg' border='0' alt='user posted image'>

திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட சென்னைச் சாமி சதுர்வேதி சாமியார், சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்திச் சென்று ஹைதராபாத்தில் வைத்து பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கிடைத்து வரும் விவரங்கள் பிரேமானந்தாவையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு உள்ளன.

இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை போலீசில் குவித்து வருகின்றனர்.

கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலுடன் பெண்களுடன் ராத்திரி நேரத்து பூஜைகள் நடத்தியிருக்கிறார் இந்த பிராடு சாமி. அந்த வேடம் போட்டுக் கொண்டு இவர் செய்ததாகக் கூறப்படும் எல்லை மீறல்கள் எல்லாமே அசிங்க ரகம் என்கிறது போலீஸ்.

சுவாமிகள் என்று நம்பி வந்த பெண்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சீரழித்துள்ளார். அத்தோடு இவர் மீது ஓரினச் சேர்க்கை புகார்களும் வந்துள்ளன.

ஜெயேந்திரரின் விஷயம் பெரிதாகிவிட்டதால் இவர் விஷயம் அமுங்கிவிட்டது. ஆனால், இவர் மீதான விசாரணைகள் அமைதியாக அதே நேரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சாமியார் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

இதையடுத்து இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னிடம் போலீஸார் விசாரணை நடத்தி முடித்து விட்டார்கள். எனவே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சதுர்வேதியின் 25 பவுன் அறைஞான் கயிறு!, 35 பவுன் பூணூல்...!!

பிரேமானந்தாவுக்கெல்லாம் பிரேமானந்தாவாகக் கருதப்படும் சதுர்வேத சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட நகைக் குவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பெண்களிடம் செக்ஸ், ஓரினச் சேர்க்கை, ஆள் கடத்தல், தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ள சதுர்வேத சுவாமிகளின் கனரா வங்கி லாக்கரை போலீசார் சோதனையிட்டபோது ஏகப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகள் சிக்கின.

<img src='http://www.thatstamil.com/images25/chaturvedi23-333.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/chaturvedi12a-280.jpg' border='0' alt='user posted image'>

அதன் லிஸ்ட்:

1. தங்க பூணூல் 35 பவுன்

2. தங்க அறைஞான் கயிறு 25 பவுன்

3. பஞ்சாயுத மாலை 35 பவுன்

4. கவச குண்டலம் 10 பவுன்

5. கை காப்புகன் 50 பவுன்

6. சங்கு, சக்கர தோடு 5 பவுன்

7. தாமரை மணி மாலை 10 பவுன்

8. தங்க கிருஷ்ணர் சிலை 10 பவுன்

9. ராமானுஜர் சிலை 10 பவுன்

10. வைரங்கள் பதிக்கப்பட்ட 6 மோதிரங்கள்

11. கைவங்கி 10 பவுன்

12. மரகதம் உள்ளிட்ட ராசிக் கற்கள்

இதைத் தவிர டம்ளர் உள்ளிட்ட வெள்ளியில் ஏகப்பட்ட பொருட்களும் லாக்கரை நிறைத்திருந்தன.

இவை அனைததும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிடிபட்ட இந்த நகைகளை உடல் முழுவதும் அணிந்து கொண்டு, கிருஷ்ணர் வேடமும் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு பக்தைகளிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவது சதுர்வேதியின் வேலையாக இருந்து வந்தது.

இந்த நகைகள் தவிர ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தின் முக்கிய நகர்களில் பல கோடி மதிப்புக்கு பங்களாக்கள், நிலங்களும் சதுர்வேதிக்குச் சொந்தமானவையாக உள்ளன. இதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

மக்களை நல்வழிப்படுத்த வந்த இந்த சாமியாரிடம் உள்ள கார்களின் எண்ணிக்கை 4. இதில் ஒன்று பென்ஸ் கார்.

இந்த நகைகள், சொத்துக்கள், கார்கள் அனைத்தும் பக்தர்களிடம் இருந்து சதுர்வேதி பல வகைகளிலும் பறித்தது என்கிறார்கள்.

சதுர்வேதியின் மோசடிகள் குறித்து சென்னை துணை கமிஷ்னர் ராஜேந்திரன், உதவி கமிஷ்னர் அன்புமொழி ஆகியோர் தலைமையிலான படைகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்தப் படையின் அதிகாரிகளைச் சந்திக்கும் பல பெண்களும் ஆண்களும் தாங்கள் சதுர்வேதியிடம் மோசம் போனதை பட்டியலிட்டு வருகிறார்கள்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இன்னுமொரு பிரேமானந்தா...! - by kuruvikal - 12-03-2004, 11:39 AM
õõ.. - by Danklas - 12-03-2004, 12:35 PM
[No subject] - by குத்தூசி - 12-03-2004, 12:37 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 12:55 PM
Re: õõ.. - by kuruvikal - 12-03-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 12-03-2004, 02:30 PM
[No subject] - by KULAKADDAN - 12-03-2004, 03:38 PM
[No subject] - by tamilini - 12-03-2004, 04:41 PM
[No subject] - by shiyam - 12-03-2004, 05:58 PM
[No subject] - by vasisutha - 12-03-2004, 07:54 PM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:08 PM
[No subject] - by sinnappu - 12-03-2004, 08:10 PM
[No subject] - by shiyam - 12-04-2004, 04:33 AM
[No subject] - by hari - 12-05-2004, 05:51 AM
[No subject] - by hari - 12-05-2004, 05:52 AM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 08:36 AM
[No subject] - by hari - 12-05-2004, 10:31 AM
[No subject] - by tamilini - 12-05-2004, 12:57 PM
[No subject] - by shiyam - 12-05-2004, 01:23 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 01:31 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 02:04 PM
[No subject] - by KULAKADDAN - 12-05-2004, 05:54 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:31 PM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 06:42 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 06:52 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:53 PM
[No subject] - by hari - 12-05-2004, 06:59 PM
[No subject] - by வெண்ணிலா - 12-05-2004, 07:07 PM
[No subject] - by tamilini - 12-05-2004, 07:11 PM
[No subject] - by kuruvikal - 12-05-2004, 07:45 PM
[No subject] - by paandiyan - 12-06-2004, 06:07 AM
[No subject] - by tamilini - 12-06-2004, 12:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)