Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழகச் சிறுத்தைகள் தமிழீழத்தில்....!
#1
<b>21ம் நூற்றாண்டின் விடுதலை போராட்ட தலைவர்களில் தேசியத் தலைவர் மாத்திரமே மண்ணில் துணிந்து நின்று எதிரியை விரட்டக் கூடியவர்</b>

இருபத்தோராம் நூற்றாண்டின் தியாக விடுதலைப் போராட்ட தலைவர்களில் தமிழீழத் தேசியத் தலைவர் ஒருவர் மட்டுமே தாய் மண்ணில் களத்தில் நின்று பகைவர்களை விரட்டியடிக்கக் கூடிய போராளியாக மண்ணைப் பாதுகாக்கின்றார் என தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று பி.ப.3.30 மணியளவில் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "அறிவமுது" பதிப்பகத்தின் நான்கு நூல்கள் அறிமுக விழாவில் கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் விழாவின் பொதுச் சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம், திருமதி தியாகம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தமிழீழத் தேசியக் கொடியினை கட்டளைத் தளபதி கேணல் தீபன் ஏற்றி வைத்தார்.

பேரிகை இலக்கிய அமைப்பின் தலைவர் வே. வேளமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்சியில் வெளியீட்டுரையினை "வெளிச்சம்" சஞ்சிகையின் ஆசிரியர் பி.கருணாகரன் நிகழ்த்தினார்.

நூல்களுக்கான மதிப்பீட்டுரைகளை போராளி மலைமகள்ää போராளி கலைக்கோää கிளிநொச்சி தமிழ்ச் சங்கச் செயலாளர் வே. பரமநாதப்பிள்ளை முதுமை வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

கப்டன் மலரவனின் "போருலா" ரஷ்ய நாவலான முல்லை மனிதனின் கதை கோபூரின் "மலர்கோலம்" ஆகிய நூல்களுடன் பண்டிதன் நாள் குறிப்பேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

""போருலா" நூலினை போராளி தமிழ்க்கவி வெளியீட கட்டளைத் தளபதி கேணல் தீபன் பெற்றுக் கொண்டார். முல்லை மனிதன் கதையை ஊடக ஒருங்கிணைப்பு இணைப்பாளர் நரேஸ் வெளியிட கல்விக் கழக பொறுப்பாளர் வே. இளங்குமரனும் கோபூரின் மலர்கோலம் நூலினை நிதர்சன பொறுப்பாளர் சேரலாதன் வெளியிட நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா பெற்றுக் கொண்டார். பண்டி தன் நாள் குறிப்பேடு 2005 இனை அரசியல்துறை துணைப் பொறுப்hளர் சோ.தங்கன் வெளியிட காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெற்றுக்கொண்டார்.

இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திருமாவளவன் தொடர்ந்து உரையாற்றுகையில்ää

ஈழ விடுதலையை ஆதரிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். தமிழர்களுக்கு என்று ஒரு அரசு வேண்டும் அது தமிழீழத்தில் தான் மலர்ந்திருக்கிறது. போர் நடந்த இழப்புக்கள் ஏற்பட்ட பூமியாக அநாதைகளாக பாதிக்கப்பட்டவர்களாக யாவரையும் கைவிட்டு விடாமல் பேணிக் காக்கும் அமைப்புகளை தலைவர் நிறுவி இருப்பதும் மகத்தான கட்டுமான பணியினை தொடங்கி இருப்பதும் வியப்பில் ஆழ்த்துகின்றது. இராணுவத்தினர் பதவி பணத்திற்காக போராட விடுதலைப்புலிகள் இனத்தின் விடுதலைக்காக மண்ணை மீட்க வேண்டும் என்பதற்காக போரிடுகிறார்கள்.

தாயகத்தில் மண்ணை காப்பதில் பெண் புலிகளின் பங்கு கண்டு பெருமையுறுகிறேன். பெண்கள் விடுதலை பெற்றிருப்பது இத் தமிழீழத்தில் மட்டும் தான். நள்ளிரவிலும் நிழலோடு நிழலாக மரத்தோடு மரமாக கிளையோடு கிளையாக பூச்சிகள் பாம்புகள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற தியாக உணர்வோடு அவர்கள் உள்ளனர்.

விடுதலைப்புலிகள் மரபு வழி இராணுவமாக வளர்ச்சி கண்டுவிட்டார்கள். சிறிலங்கா அரசு வரட்டுக் கௌரவத்தினால் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க தயாராக இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் தமிழர்களுக்கு ஒரு அரசு தமிழீழ அரசாக அமைய வேண்டும் என்பதில் விரும்பம் கொண்டுள்ளனர் என்றார்.

புதினச் செய்தி முக்கியம் கருதி இங்கும் தரபப்டுகிறது உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தமிழகச் சிறுத்தைகள் தமிழீழத்தில்....! - by kuruvikal - 12-03-2004, 11:26 AM
[No subject] - by tamilini - 12-03-2004, 05:02 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)