12-03-2004, 12:12 AM
<img src='http://www.yarl.com/forum/files/kcpic.gif' border='0' alt='user posted image'>
பச்சைகுழந்தையின்
பசித்த வயிற்றுக்கு
பால் வேண்டாம்
பாண் வேண்டாம்
பச்சைதண்ணி கூடவா
கிடைக்காமல் போய்விட்டது...!
சுட்டு பொசுக்கும் வெயிலில்
சூடான் குழந்தை
சுருண்டு
சுறணையை இழந்து
சுடு மண்ணில் இருக்கிறதே... ஏன்?
கொன்றவர்களின் உடல்களையும்
இறந்தவர்களின் உடல்களையும்
நீங்கள் தின்று உயிர் வாழ்கிறீர்கள்
பறவைகளே.!
பச்சை குழந்தையின் உடல்களுமா
உங்களுக்கு வேண்டும்..?
பாவம் .... பாவம் உங்களுக்கு வேண்டாம்...!
ஆனாலும்
நீங்கள் பறக்கும் போதே
பட்..பட்..என்று
சுட்டு போட்டு
பச்சை உடல்களை வாட்டி
பஜ்ஜி தின்பது போல்
பட்சி தின்பார்களே
மனிதர்கள்.
அவர்கள் தருமத்தின் முன்
உங்கள் தருமம் மேல்
உயிர் துறக்கும் வரை
உடலுக்காக காத்திருக்கிறீர்களே.
பாலகனுக்கு பால் தர
அம்மா இல்லை
ஆனால்
பசித்த உன் வயிற்றுக்கு
தன் உடலையே
பலகாரம் ஆக்குகிறான்
இப் பாலகன்..
பட்சியே.!
பல்லாண்டு நீ வாழ்ந்திடு.
பாவி மனிதர்களின்
பல்சுவை நிகழ்வால்
பரிணமித்த இவன்
பசியால் துடித்து
பறவைக்கு இரையாகி
பாரினில் வாழ்கிறானா?
http://kavithan.yarl.net/
கவிதன்
2/12/2004
4.12 மாலை
பச்சைகுழந்தையின்
பசித்த வயிற்றுக்கு
பால் வேண்டாம்
பாண் வேண்டாம்
பச்சைதண்ணி கூடவா
கிடைக்காமல் போய்விட்டது...!
சுட்டு பொசுக்கும் வெயிலில்
சூடான் குழந்தை
சுருண்டு
சுறணையை இழந்து
சுடு மண்ணில் இருக்கிறதே... ஏன்?
கொன்றவர்களின் உடல்களையும்
இறந்தவர்களின் உடல்களையும்
நீங்கள் தின்று உயிர் வாழ்கிறீர்கள்
பறவைகளே.!
பச்சை குழந்தையின் உடல்களுமா
உங்களுக்கு வேண்டும்..?
பாவம் .... பாவம் உங்களுக்கு வேண்டாம்...!
ஆனாலும்
நீங்கள் பறக்கும் போதே
பட்..பட்..என்று
சுட்டு போட்டு
பச்சை உடல்களை வாட்டி
பஜ்ஜி தின்பது போல்
பட்சி தின்பார்களே
மனிதர்கள்.
அவர்கள் தருமத்தின் முன்
உங்கள் தருமம் மேல்
உயிர் துறக்கும் வரை
உடலுக்காக காத்திருக்கிறீர்களே.
பாலகனுக்கு பால் தர
அம்மா இல்லை
ஆனால்
பசித்த உன் வயிற்றுக்கு
தன் உடலையே
பலகாரம் ஆக்குகிறான்
இப் பாலகன்..
பட்சியே.!
பல்லாண்டு நீ வாழ்ந்திடு.
பாவி மனிதர்களின்
பல்சுவை நிகழ்வால்
பரிணமித்த இவன்
பசியால் துடித்து
பறவைக்கு இரையாகி
பாரினில் வாழ்கிறானா?
http://kavithan.yarl.net/
கவிதன்
2/12/2004
4.12 மாலை
[b][size=18]

