Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீ லங்கா அரசின் பதில்
#1
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாக சிறீ லங்கா அரசு தனது உத்தியோகபூர்வ கருத்தை இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் திணைக்களம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

போர் நிறுத்தத்தை காப்பாற்ற அரசு உரிய முறையில் செயல்படுகின்றது. போர் நிறுத்த மீறல் காரணமாக சாதாரண பொது மக்கள் மத்தியில் அச்சமும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளது. இதனை நீக்க இனங்களிடையே சமநிலையைப் பேண அரசாங்கம் முயற்சிக்கின்றது.

வடக்கு கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திகளை முன்னிறுத்தி இடைக்கால தன்னாட்சி அதிகார சபை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராகவிருக்கின்றது. இது நோர்வே தரப்பு ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் 5.12.2002ல் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைய இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது.

எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் நிபந்தனையற்ற பேச்சிற்கு வருமாறு தமது மாவீரர் தின உரையில் கூறியிருப்பது அச்சமூட்டும் பாணியில் அமைந்துள்ளது. அவர் ஒரு நிகழ்ச்சியை மாத்திரம் மையமாக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருப்பது மறைமுகமாக நிபந்தனைகளை விதித்துள்ளதாக அரசு கருதுகின்றது. அந்த நிபந்தனையானது உண்மையான பேச்சுவார்த்தைக்கு பாதகமாக அமைந்துள்ளது.

2003 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இடை நிறுத்தப்பட்டுள்ள பேச்சுவார்ததையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளை மக்கள் நன்கு அறிவார்கள். இந் நிலையில் நோர்வே தரப்புடன் தாம் தொடர்ந்தும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்.
<b> </b>
Reply


Messages In This Thread
சிறீ லங்கா அரசின் பதில் - by MEERA - 12-01-2004, 10:46 PM
[No subject] - by Kanani - 12-07-2004, 05:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)