07-31-2003, 09:07 PM
[size=18]ஆண் வேஷம் போட்ட அமெரிக்கப் பெண்
<img src='http://www.thisaigal.com/aug/life.jpg' border='0' alt='user posted image'>
சூ சால்லி ஹேல்
[size=18]கீதா பென்னெட்
சில சமயங்களில் கதைப் புஸ்தகங்களில் படிப்பதை விட சுவாரசியமான விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது ரொம்பவே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
சூ சால்லி ஹேல்என்ற பெயர் கொண்ட பெண்மணி சமீபத்தில் தனது அறுபத்து ஐந்தாவது வயதில் இறந்தார். அவருடைய வாழ்க்கை சரிதத்தை லாஸ் ஏஞ்ஜலஸ் டைம்ஸ் செய்தித்தாள் விவரமாக எழுதியிருந்தது. அதைப் படித்தபோது இப்படிப்பட்ட அசாத்திய துணிச்சல் கொண்ட பெண் நம்மிடையே வாழ்ந்தார் என்பது அதிசயமான விஷயமாக தோன்றியது.
அப்படி இந்தப் பெண் என்னதான் செய்தார்?
இருபது வருடங்களாக ஆண் வேடம் போட்டுக் கொண்டு போலோ (polo) விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.[/color]
கலிபோர்னியாவில் "க்ரோவர் ஜோன்ஸ்" என்ற திரைப்பட வசனகர்த்தாவிற்கு மகளாக பிறந்த ஹேல் தனது சின்ன வயதிலேயே குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டு போலோ விளையாடப்படும் புல்வெளிகளில் தனது நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தார். இந்த சிறுமியின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட அந்த போலோ க்ளப்பின் உரிமையாளர் அவளுக்கு சின்ன குதிரை (pony) மேலே உட்கார்ந்து போலோ விளையாட சொல்லிக் கொடுத்தார். அவளும் அந்த விளையாட்டை சிறப்பாக ஆட கற்றுக்கொண்டாள். பிற்காலத்தில் போலோ போட்டிகளில் பங்கெடுக்கவும் முடிவு செய்துக் கொண்டாள்.
ஆனால் பெண்கள் இந்த போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்ற விவரம் தெரிய வந்தது.
அதனால் ஆண் மாதிரி மாறுவேடம் புனையத் தயாரானாள். தன்னுடைய சிவப்பு நிறக் கூந்தலை ஹெல்மெட்டுக்கு கீழாக முடிந்துக் கொண்டு மார்பை டேப்புக்கள் மூலம் அழுத்தி சமமாக்கிக் கொள்வாளாம். ஆண்கள் அணியும் ஷர்ட்களைப் பெரிய அளவில் அணிந்துக் கொள்வாளாம். அத்தோடு ஒட்டு மீசையும் உண்டு.
ஹேலின் நண்பர்கள் பலரும் பெண்களும் போலோ க்ளப்களில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும் என்று மன்றாடி விண்ணப்பங்களை சேகரித்து அனுப்பியதற்கு பலன் இருந்தது. இருபது வருடங்கள் கழிந்த பிறகு முதல் பெண்ணாக ஹேல் போலோ க்ளப்பில் மெம்பராக சேர்த்துக் கொள்ளப் பட்டார். பெண்களால் இந்த விளையாட்டில் ஆண்களுக்கு சரியாக ஆட முடியும் என்று ஐந்து குழந்தைகள் பெற்ற பிறகும் கூட விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்று நிரூபித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
இதை என் கணவர் பென்னெட்டிடம் சொன்னபோது அவர் ஆச்சரியப்படவில்லை.
[size=18]இப்படி விளையாட்டிலும், கலையிலும் பெண்களுக்கு சமத்துவம் தராத நாடு பெண் உரிமை பற்றி உரக்க பேசும் அமெரிக்காதான். அதுவும் இருபதே வருடங்களுக்கு முன் என்பது ரொம்பவே ஆச்சரியமான விஷயம் தானே!
நன்றி - திசைகள்.

nadpudan
alai
alai