12-01-2004, 11:32 AM
எதற்காக இந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
ஜ திங்கட்கிழமைஇ 29 நவம்பர் 2004 ஸ ஜ நாடாளுமன்றம் ஸ
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் காலத்தின் ஒரு கட்டாயமாக 1997ஆம் ஆண்டில் தொடர்ச்சியான ஆலோசனைகள் திட்டமிடல்களின் பின்னணியில் ஆர்வம் மிக்க தமிழ் ஊடகவியலாளர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சர்வதேச ரீதியாக ஊடகத்துறையின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் காணப்பட்ட அதேவேளையில் தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சி மிக மந்தமானதாகவே அமைந்திருந்தது. மறுபுறத்தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சர்வதேச சாசனங்கள் பல உலகநாடுகளில் அங்கீகாரத்தைப் பெற்றுவந்த போதிலும் தமிழ் ஊடகவியலாளர் அச்சத்தின் மத்தியிலேயே தமது பணிகளை மேற்கொள் வேண்டிய நிலையும் இந்த நாட்டில் காணப்பட்டது.
அவர்களின் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்தது. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசாங்கமோ அல்லது தேசிய ரீதியாகவுள்ள சங்கமோ அல்லது தேசிய ரீதியாகவுள்ள ஊடகவியலாளர் அமைப்புக்களோ தமிழ் ஊடகவியலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றிக் கண்டு கொண்டு கொள்வதேயில்லை. இந்த நிலைமைகளுக்கு முடிவைக் காணும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராகக் காணப்படும் அடக்குமுறையில் ஒரு பகுதியாக தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ஊடகங்களுக்கு வாய்ப்ப10ட்டுப் போடுவதையே அரசாங்கமும் விரும்பியது. இந்த நிலைமையின் உச்சகட்டமாக 1997ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் இடம் பெற்றது. வீரகேசரி பத்திரிகையில் அலுவலக நிருபர் ஹீகஜனும், வீரகேசரியன் வவுனியா நிருபராகக் கடமையாற்றிய பீ.மாணிக்கவாசகமும் பயங்கரவாதத்துக்கு எதிரான படைப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர். தனிமையில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் இவர்களைச் சம்பந்தப்படுத்தும் செய்திகள் வெளிவந்த போதிலும் பல மாதகாலமாக குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மீது நீதி மன்றத்தில் விசாரணைகளும் நடத்தப்படவில்லை. அரச பயங்கரவாதம் கட்டவிழ்ந்து விடப்பட்டிருந்த நிலையில் இது வழமையானதாக இருந்த போதிலும், பிரபலமான தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் கடமையாற்றும் முன்னணி ஊடகவியலாளர்கள் இருவர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவும் இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சமளிப்பதாகவே இருந்தது.
இதில் குறிப்பிடத்தக்க அச்சம் என்னவென்றால், இரண்டு பத்திரிகையாளர்கள் நீதி விசாரணைகள் ஏதுமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் எந்த ஒரு அமைப்பும் அதற்கெதிராகப் போராடவோ, குரல் கொடுக்கவோ முன்வரவில்லை. சாதாரணமாக ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டாலேயே வீதியில் இறங்கி மறியல் போராட்டங்கள் நடத்தும் தேசிய ரீதியான அமைப்புக்கள், இதனைக் கண்டும் காணதவையாக இருந்தன. இதற்கு அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கள் இரத்ததுடன் கலந்துவிட்ட இனவாதமும் இதற்கு ஒரு காரணம், ஆங்கில சிங்களப் பத்திரிகைகளும் எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் கைதான பத்திரிகையாளர்களை பயங்கரவாத சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபடுத்திய செய்திகளையே வெளியிட்டுவந்தன. இந்த நிலையில் சர்வதேச ரீதியாகச் செயற்படும் ஊடக அமைப்புகளும், இந்த விடயத்தை ஊடக சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகக் கருதவில்லை.
இந்த நிலையில்தான் தமிழ் ஊடகவியலாளர்களுக்கெனக் குரல் கொடுப்பதற்கான தனியான அமைப்பு ஒன்று தேவை என்பது உணரப்பட்டது. அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் ஊடகவியலாளர்களாக இருந்தாலும், எமது பிரச்சினைகள் தனித்துவமானவை, தேசிய அமைப்புகள் அதனைப் பிரதிபலிக்கப்போவதில்லை என்பதும் தெளிவாக உணரப்பட்டது. மாணிக்கவாசகமும், சிறீகஜனும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் சில மாத காலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டபோது பாதுகாப்புத் துறையினரின் சோடிப்புகளும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தேசிய அமைப்புகளும் அம்பலமாகின. ஆக, எமது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு, எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, எமது நலன்களைப் பேணிக்கொள்வதற்கு தனியான அமைப்பு ஒன்று தேவை என்பது தெளிவாக உணரப்பட்டது. தேசிய அமைப்புகளை நம்பியிருப்பது அர்த்தமில்லை என்பதையும் அப்போதுதான் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் உணர்த்தார்கள்.
இதனை உணர்ந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சந்திப்புக்கள், கலந்துரையாடல்களின் விளைவாகக் கருக்கட்டியதுதான் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். பின்னர் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உத்தியோகப10ர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. வடக்கு,கிழக்கு, மலையகம் உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 90 வரையிலான ஊடகவியலாளர்கள் இந்த ஆரம்ப வைபத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஆரம்ப வைபவத்தில் வைத்தே ஒன்றியத்தின் யாப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருமலையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் எஸ்.குருநாதன் ஒன்றியத்தின் முதலாவது தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார். தினக்குரல் பத்திரிகையில் பணிபுரிந்த ப10.சீவகன் முதலாவது செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாக பின்வருவன எமது யாப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1. தமிழ் ஊடகவியலாளர்களின் நலன்களுக்காகவும், அவர்களது தொழில் ரீதியான மேம்பாடுகளுக்காகவும் செயற்படுத்தல்.
2. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளின் போதும், அவர்களின் சார்பில் செயற்படுத்தல்.
3.அரசியல். பாதுகாப்பு முதலான நிலவரங்களில் கீழ் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், சிக்கல்கள் முதலானவற்றின் போது அங்கத்தவர்களின் நலனுக்காகச் செயற்படுதல்.
4. அங்கத்தவர்களின் தொழில் ரீதியான பிணக்குகளின்போதும், தலையிட்டு நடவடிக்கை எடுத்தல்
5. அங்கத்தவர்கள் தொழில் புரியும் நிறுவனங்களில் நிருவாகத்திடமிருந்து எழுகின்ற பிணக்குகளின் போதும், அதிகார துஷ்பிரயோகத்தின் போதும், அங்கத்தவர்கள் சார்பில் செயற்படுதல்.
6. அங்கத்தவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்கள், பிணக்குகளின் போது செயற்படுதல்
7. ஏனைய தனிநபர்கள், அமைப்புகள் முதலானவற்றிலிருந்து எழும் பிரச்சினைகளின்போது, செயற்படுத்தல்.
8. அங்கத்தவர்கள் சகல விதத்திலும் இன ஒதுக்கல் மற்றும் ஏனைய பாராபட்சங்களால் பாதிக்கப்படும் போது, நீதியைப் பெற்றுக்கொடுக்கச் செயற்படுத்தல்.
9. ஊடகவியல் துறை சார்ந்த அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுத்தல்.
ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக எமது யாப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் இவைதான். இவ்வாறான பிரச்சினைகளில் அங்கத்தவரின் அல்லது அவரது பின் உருத்தாளியின் எழுத்து வடிவிலான விண்ணப்பத்தின் பேரில், செயற்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு எமது ஒன்றியம் செயற்படும்.
இவ்வகையில் கடந்த காலங்களில் நாம் பல சவால்களைச் சந்தித்திருக்கிறோம். எமது ஒன்றியத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த எம்.நிமலராஜனின் படுகொலை எம் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வாக 2000 அக்டோபர் 19ம் திகதி நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்று சில நாட்களிலேயே கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக கவன ஈர்ப்பு மறியல் போராட்டம் ஒன்றை சுதந்திர ஊடக அமைப்புடன் (குசநந ஆநனஐய ஆழஎநஅநயெ) இணைந்து நாம் நடாத்தியிருந்தோம். இதனைவிட ஊடகத்துறை அமைசருடனான சந்திப்புகளின் போதும் இது தொடர்பாக நாம் பலதடவை பிரஸ்தாபித்திருந்ததுடன், நிமலராஜன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இந்தப் படுகொலை நடைபெற்று இன்று நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், இந்தக் கொலை விசாரணை தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாதது எமக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துவதாகவேயுள்ளது.
இதனைவிட எமது ஒன்றியத்தின் உப தலைவர்களில் ஒருவராக இருந்த ஜ.நடேசன் இவ்வருடம் மே மாதம் மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டமையும் எமக்குப் பேரதிர்ச்சியைத் தரும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்காற்றிச் செயற்பட்டவர்தான் நடேசன். நிமலராஜனைப் போல தான் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியமைக்காகவே நடேசன் படுகொலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளின் மத்தியிலும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட்ட நடேசன் அதற்கான பலனாக மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
நடேசனின் இந்த திடீர் மறைவு எமது ஒன்றியத்துக்கு பேரிழப்பாக இருந்த அதேவேளையில், அவர் மரணமடைந்த தருணத்திலிருந்து நெல்லியடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரையிலும் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமே மேற்கொண்டிருந்தது. அனைத்துச் செலவீனங்களையும் நாமே பொறுப்பேற்றுக் கொண்டோம். அத்துடன், நடேசனின் குடும்பத்தினருக்கும் குறிப்பிடத்தக்கதொரு நிதி உதவியைச் செய்திருந்தோம். அதேவேளையில், நடேசனின் படுகொலை தொடர்பாக பாராபட்சமற்;ற நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தகவல் ஊடகத்துறை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம். நிமலராஜன் கொலை வழக்கைப் போலவே நடேசனின் கொலை வழங்கும் முன்னேற்றம் எதுவும் இல்லாதிருப்பது எமக்கு அதிருப்தியைத்தர்ன ஏற்படுத்துகின்றது. இதற்கு சில அரசியல் காரணங்கள் இருக்கின்ற என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் இந்தக் காரணங்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரத்தை அச்றுத்தும் ஒரு அம்சமாகவே தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை ஊடக சுதந்திரத்துக்காகப் போராடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இவ்வாறான அரசியல் காரணங்கள், அரசியல் பின்னணிகள் இருக்கும் வரையில் தமிழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு விடயத்தையும் குறி;ப்பிட வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது. நடேசனின் படுகொலையைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்க்ள அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறியிருக்கின்றார்கள். இவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதால் அவர்கள் தாம் நேசித்த, பணிபுரிந்த பகுதிகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு வெளியேறிய மூன்று பத்திரிகையாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி ஜரோப்பிய நாடுகளுக்கும் சென்றிருக்கின்றார்கள். இது தமிழ் ஊடகத்துறை எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலைத்தான் வெளிப்படுவதாக இருக்கின்றது.
ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்பு என்பதற்கு அப்பால் சென்று பின்வரும் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
1. தமிழ் ஊடகவியலாளர்களின் சமூக, பொருளாதார, கலாசார, கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தல்.
2. ஊடகவியலாளர்கள் அனைவர் மத்தியிலும் புரிந்துணர்வு, ஒருங்கிணைப்பு, இணக்கப்பாட்டினை ஏற்படுத்தல்.
3. ஏனைய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கங்கள் மத்தியிலும் நட்புறவை ஏற்படுத்தி இணக்கப்பாட்டுடன் செயற்படுத்தல்.
4. அங்கத்தவர்களின் கல்வித்தரம் மற்றும் அந்தஸ்த்தை உயர்த்துவதற்காக உதவுதல்
5. இளைய தலைமுறை ஊடகவியலாளர்களை ஊக்குவித்தல்.
6. பிராந்திய ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்புக்கு வழிவகுத்தல்.
7. சகல ஊடத்துறையிலும் ஊடகத்துறை நிறுவனங்களிலும் தமிழ் சிறுபான்மை இனத்தவர்களுக்கு மறுக்கப்படுகின்ற சட்ட முறையிலான உரிமைகளைப் பெற குரல் கொடுத்தல்
8. அங்கத்தவர்களின் நலன்கருதி பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துதல்.
இந்த நோக்கங்களை அடைவதற்காக கடந்த சில காலங்களில் குறிப்பிடத்தக்களவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்திருந்தாலும், அவை போதுமானவையல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் நலன்களை முன்னிட்டு பல பயிற்சிப் பட்டறைகள் நடைமுறையிலிருக்கின்ற போதிலும்கூட, கடந்த இரண்டு வருட காலத்தில் இது போன்ற பயிற்சிகளை நடந்த முடியாமல் போய்விட்டது. நாட்டில் போர்நிறுத்தம் நடைமுறையிருக்கின்றபோதிலும்கூட, பொதுத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் என்பன இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதில் எமக்குச் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. இருந்த போதிலும் சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகை முரண்பாட்டு ஆணைக்குழு, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் போன்றவற்றுடன் இவ்வாறான கருத்தரங்குகளை நடத்தவது தொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய ஆதரவுடன் சில கருத்தரங்குகளை எதிர்காலத்தில் நடத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இது போன்ற விடயத்தில் பத்திரிகை உரிமையாளர்களின் ஆதரவையும் நாம் முக்கியமாக எதிர்பார்க்கின்றோம். பத்திரிகைகள் மேலும் தரமானவையாக வெளிவரவேண்டுமானால் இரண்டு விடயங்கள் அவசியம். ஒன்று ஊடகவியலாளர்களின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும், புதிய நுட்பங்களையும், முறைகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென முறையான நிறுவனம் எதுவும் இதுவரை காலமும் இந்த நாட்டில் இருக்காத காரணத்தால், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக ஊடக அமைப்புகளே உள்ளன. எமது கடமைகளில் ஒன்றாக அதனைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். இரண்டாவதாக, ஊடக சுதந்திரம் இல்லாத நிலையில் எந்த ஒரு ஊடகமும் தரமானதாக வரப்போவதில்லை. அந்த ஊடக சுதந்திரத்தைப் பெறுவதற்காகவும், பேணுவதற்காகவும் பாடுபடும் ஒரு அமைப்பாகவே எமது அமைப்பு இருக்கின்றது. ஆக, ஏதோ ஒரு வகையில் ஊடகங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகவே எமது செயற்பாடுகள் உள்ளன. ஊடகவியலாளர்களுடைய செயற்திறனை மேம்படுத்துவதன் மூலம் ஊடகங்களின் தரத்தை உயர்த்துவதாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த வகையில்தான் ஊடக நிறுவன உரிமையாளர்களின் தேவைகளையும் நாம் ப10ர்த்தி செய்கின்றோம். ஊடக உரிமையாளர்களும் எம்முடைய தேவைகளை உணர்ந்து அவற்றை செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதற்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இந்நாட்டில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும் ஊடகவியலாளர்களுடைய மேம்பாட்டுக்குமாக எதனையும் செய்வதாக இருக்கவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே வருடாந்தம் சுமார் பத்து ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து அவர்களைக் கௌரவிப்பதென்ற முடிவை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எடுத்தது, தமிழ் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இதனை நாம் மேற்கொள்கின்றோம். தமிழ் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை மட்டுமன்றி, தமிழ் ஆர்வலர்களாக இருக்கின்ற தொழில் அதிபர்கள், சமூகசேவையாளர்கள் சிலரையும் இதற்காக நாம் நாடவேண்டியிருந்தது. அந்த வகையில் மனமுவந்து விருப்பத்துடன் இதற்காக தம்மாலியன்ற உதவிகளை அவர்கள் அனைவரும் வழங்கியிருக்கின்றார்கள். இன்றைய நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றதென்றால் அதற்கு அவர்களுடைய நிதி உதவி எமக்குப் பெரும் பலமாக இருக்கின்றது என்பது உண்மை. அவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கின்றோம். எதிர்வரும் வருடங்களிலும் எம்முடன் இணைந்து செயற்பட அவர்களை அழைக்கின்றோம்.
ஊடகவியலாளர்களின் பணி ஒர சமூகக் கடமை என்ற வகையில்தான் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்தும் அமைந்திருக்கும். இந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அமைந்திருக்கும். இந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் எமது செயற்பாடுகளில் தீவிர ஆர்வத்துடன் பங்குகொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆர். புhரதி
செயலாளர்
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்