07-31-2003, 07:02 PM
இந்தியாவின் புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான “றோ” (சுயுறு) நினைத்திருந்தால் ரெலோவின் தலைவர் சிறீசபாரத்தினம் உட்பட பலரது உயிர்களைப் பாதுகாத்து இருக்கலாம். இவ்வாறு ரெலோ அமைப்பின் முதல்வர் எனப்படும் சட்டத்தரணி ந.சிறீகாந்தா கூறியுள்ளார். சக்தி தொலைக்காட்சி சேவையின் “ மின்னல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதாவது இந்தியாவின் றோ அமைப்பு புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்டு ரெலோவைப் பலவீனப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

