11-30-2004, 12:52 PM
Sriramanan Wrote:குருக்கள் என்வோ செய்தால் குற்றமில்லையாம்.
ஆன்மீகம் எண்ட பெயரில் இந்து மதத்தில் இடைவெளியின்றி நடக்கும் சம்பவங்களில் இது ஒன்று மட்டுமே. இதைப் போல ஆயிரம் ஆயிரம் பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள் ஆன்மீகத்தைப் போதிக்கும் புனிதர்களால் (?) நடாத்தப்பட்டுள்ளது. இவற்றைக் கணக்கிலெடுப்பது தெய்வக் குற்றம்.
ஏன் சிறீரமணன் கோயில்களில் மட்டுந்தானா இவை நடைபெறுகின்றன... பள்ளிவாசல்களிலும் விகாரைகளிலும் தேவாலயங்களிலும் ஏன் ஊருக்கு ஊர் வீடுகளிலும் தான் நடக்குது...வீட்டில் நடப்பது நாட்டில் நடப்பது அரச சபையில் நீதிச் சபையில் நடப்பது கோயில்களில் நடக்க என்ன நேரமா எடுக்கும்...???! இவை எல்லாம் நடக்க ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் இவை நடக்க வேண்டும்...!
மனிதனின் மனம் திருந்தினால் அல்லது அடக்கப்பட்டால் அன்றி இவ்வாறன அநீதிகளுக்கு நீதி கிடையாது...அப்படி அது விரைந்துகிடைக்க வேண்டும் என்றால் ஒரே வழி பயமுறுத்தி மனித மனத்தை அடக்க வேண்டியதுதான்...!
ஆன்மீக சொல்வது மனவடக்கம் பற்றி அதற்காக ஆன்மீகத்தில் தவறில்லை...அதை உச்சரித்துக் கொண்டு கடைப்பிடிக்கத் தவறுவதுதான் தவறு....ஆன்மீகப் பாதையில் தன்முன்னே அவளாய் நிர்வாணமாக நின்ற பருவப் பெண்ணை தாயினும் மேலாகக் கண்ட விவேகானந்தர் போன்ற இளைஞர்களையும் நீங்கள் பார்க்கத்த தவறக் கூடாது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

