07-31-2003, 07:00 PM
கள்ள அமெரிக்க டொலர் நோட்டுக்களைப் பாவித்து, கொழும்பு புறநகர்ப் பகுதியில் பணமோசடி செய்துவந்த காலியைச் சேர்ந்த நபர் ஒருவரை, 6000 அமெரிக்க டொலர்களோடு கையும் களவுமாகப் பொலிசார் பிடித்துள்ளார்கள்.
இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகக்கூறி, அமெரிக்க டொலர்களைக் கொடுத்து, இரத்தினக்கல் வியாபாரியிடம் கற்களை வாங்கியதாகவும், அந்த வியாபாரி கொடுத்த துப்பில், இவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரது மகன் பாஹ்ரெய்ன் நாட்டில் அச்சுக்கூடமொன்றில் தொழில்புரிவதால், அவருக்கும் இந்தக் கள்ள நோட்டுக்களை அச்சிடுவதில் ஏதும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், பாஹ்ரெய்ன் பொலிஸார் மூலம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.