11-29-2004, 09:49 AM
kavithan Wrote:Quote:நாலெழுத்து ஆயுத அரசியல் கும்பலைச் சேர்ந்த அமைச்சர் சொல்லி இருக்கிறார்... புலிகளை போருக்குப் போக வேண்டாம் என்று....!
என்ன அந்த நாலெழுத்து டக்ளஸ் தானே..
Quote:பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கேட்கும் கருடா செளக்கியமா என்பது போல நடக்குது நாடகங்கள்....!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
உங்கள் [ குருவி & யுடி & மற்றவர்கள் (இவர்களும் முகியம் இவர்களினால் தான் பல கருத்துகள் வெளிவருகின்றன) ] கருதுக்கள் மிகவும் ஆரோக்கியமானதாக செல்கின்றது ..இவ்வளவு தூரம் எனக்கு அரசியலில் அறிவு இல்லை .. படித்து பயன் பெறுகிறேன்..
உண்மையைச் சொன்னா இந்த நாலெழுத்து மூன்றெழுத்து துரோகிகளின் பெயர்களை உச்சரிப்பது நாம் எமக்கே செய்யும் தீமை போன்றதே.. அவர்களுக்கு தேவையில்லாத ஒரு விளம்பரம் அளிக்கின்றோம்...!
எங்கையோ கிடந்து மானிப்பாய் பகுதியில் கொள்ளை அடித்துத் திரிந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவக் குழுவில் இருந்த உதாரியான உந்த நாலெழுத்து ஆயுததாரியை பிரேமதாசாதான் ராசா ஆக்கினது...இவர்கள் பிழைத்தது ஜேவிபிக்கு எதிரான யுத்தத்தில் பிரேமதாசாவின் கொலைப்படைகளாக செயற்படத் தொடங்கிய பின்னர் (இதை ஜேவிபியே 90 நடுப்பகுதியில் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியோடு உறவாடிய போது மேடை மேடையாகச் சொன்னார்கள்....)... 90 இல் கொழும்புக்கு இடம்பெயர்ந்த வடக்குகிழக்கு தமிழர்களைப் பராமரிக்க வழங்கிய அகதிப் பணத்தில்....! இவர்களை பாராளுமன்றக் கதிரைக்கு அனுப்பியது யுத்தம்....! இவர்களுக்குத் தெரிந்த அரசியல் பாசிசம் புலிகள்....! தெரியாதது அரசியல் என்றால் என்ன.... மற்றும் சாதாரண பொதுமகனுக்குரிய பழக்க வழக்கம்...!
ஒரு முறை ஒரு அமைச்சர்... யாழ் தமிழ் மக்களின் பிரதிநிதி... என்று ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினார் ஆம் கட் பெனியனில்...அது எளிமையல்ல....எளிமையென்றால் அதையும் விடுத்து துண்டோடு நின்றிருக்க வேண்டும்....!
அதைப் பார்த்துவிட்டு ஒரு சிங்கள நண்பன் கேட்டான் எங்க "குடுக்காற" அரசியல்வாதிகள் மேல் போலக் கிடக்கு...என்ன தமிழ் ஆக்கள் "கசாப்புக்" கடைக்காரரையும் மந்திரியாக்கி வைச்சிருக்கினம் என்று.....!பாவம் அவனுக்குத் தெரியாது உதுகள் சொந்த மக்களையே கொன்று தின்ற மிருகங்கள் என்று...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

