11-29-2004, 05:08 AM
Jude Wrote:kuruvikal Wrote:யூட்... இந்தியா தொடர்பில் புலிகள் என்ன நினைக்கின்றார்கள்...அல்லது இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது... அல்லது சர்வதேச ரீதியாக என்ன கொளை வைத்திருக்கிறார்கள் என்னென்ன நகர்வுகளை ராஜதந்திரம் கருதி புலிகள் மேற்கொள்கின்றனர் என்பதை எல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால்.... சந்திரிக்காவின் திட்டங்களை விளக்க சிலவற்றைப் புலிகள் வெளியிடலாம்...இவை அவர்கள் தங்களின் மக்கள் சார்புக் கொள்கையை வென்றெடுப்பதற்காக செய்யும் நகர்வுகள்...!
நன்றி குருவிகளே, தங்கள் கருத்துக்களுக்கு. விடுதலைப்புலிகள் பேட்டிகள், பிரசுரங்கள் மூலம் வெளியிடும் கொள்கைகள், அரசியல் அணுகுமுறை ஆகியவற்றை துளியும் படித்துப்பா÷க்காமல், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் போல் போ÷ப்பிரகடனம் செய்யும் சண்டிய÷கள் துரோகிகளா, அல்லது அந்நிய புலனாய்வு துறையினரின் கூலிகளா என்பதையும் விடுதலைப்புலிகள் சற்று அவதானிப்பது நல்லது.
எங்கையோ படித்தோம்... சிறீலங்கா அரசு போருக்குப் போக வேண்டாம் என்று வேண்டுகோள் என்று....செய்தியைப் பார்த்தால் நாலெழுத்து ஆயுத அரசியல் கும்பலைச் சேர்ந்த அமைச்சர் சொல்லி இருக்கிறார்... புலிகளை போருக்குப் போக வேண்டாம் என்று....! அவர்களின் விருப்பமே எப்ப போர் தொடங்கும் என்பதுதான்...அவர்களின் பிரச்சாரப் பீரங்கிகள் இங்கால இப்படி முழங்க அவர் அங்க ஏதோ தானும் ஒரு தளபதி கணக்கில கதையளக்கிறார்... பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கேட்கும் கருடா செளக்கியமா என்பது போல நடக்குது நாடகங்கள்....! இன்னும் காட்சிகள் பல இடம் பெறும்...அவற்றிற்கெல்லாம் மக்கள் மசிந்துவிடாது தங்கள் கொள்கை என்ன தாங்கள் செய்ய வேண்டியதென்ன என்பதில் குறியாக இருப்பதே அவசியம்...புலிகள் சொல்வதை சரியாக உள்வாங்கிக் கொண்டு செயற்படுதலே மக்களின் தேவை....!
அந்த வகையில் உங்கள் அறிவுறுத்தல் பயனுள்ளது யூட்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

