Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகக் கும்பலின் கட்சி உருவான செய்தி 100 வீதம் உண்மையே
#16
ஈ.என்.டி.எல்.எவ். மனோ மாஸ்டர்
கருணா குழுவினால் கடத்தப்பட்டார்?

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து துரத்தப்பட்ட கருணாவுடன் இணைந்து செயற் பட்டவரும் ஈ.என்.டி.எல்.எவ். கட்சியின் செயலா ளருமான மனோ மாஸ்டர் எனப்படும் ரி.ராஜ ரட்ணம் கருணா குழுவினராலேயே கடத்தப் பட்டுள்ளார் என்று அறியவருகின்றனது.
ஈ.பி.டி.பி. அமைப்பினருடன் கருணா மீண் டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதன் காரணத்தாலும்ää கருணா தரப்பால் ஈ.என்.டி. எல்.எவ். அமைப்புக்கு வழங்கப்பட்ட வாக்குறு திகள் சில நிறைவேற்றப்படாததன் காரணத் தாலும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமா கவே மனோ மாஸ்டர் கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்தியாவில் இருந்து ஈ.என். டி.எல்.எவ். அமைப்பைச் சேர்ந்த விஜயன் என் பவர் கொழும்பு வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துவருவதற்கு ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் கருணா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஈ.பி.டி.பி. அமைப்பினருடனான கருணா தரப்பின் இந்தத் தொடர்பு ஈ.என்.டி.எல்.எவ். அமைப்புடன் கருணா செய்துகொண்ட ஒப்பந் தத்துக்கு முரணானது என்று ராஜரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அடுத்தே கருணா தரப்புக்கும் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்புக்கும் இடையில் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
கருணா தரப்பினருக்கு ஈ.பி.டி.பி. அமைப் பினருடன் உள்ள தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே ஈ.என்.டி. எல்.எவ். அமைப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு கருணா தரப்பும் உடன்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு புளொட் அமைப்பில் இருந்து விலகிய பரந்தன் ராஜன் அணியினரையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பில் இருந்து வெளி யேற்றிய டக்ளஸ் தேவானந்தாவையும் இணைத்தே ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பு உரு வாக்கப்பட்டது. இந்தக் கட்சி உருவான சில மாதங்களில் டக்ளஸைää ராஜன் குழுவினர் கட்சியில் இருந்து வெளியேற்றினர். தான் நீண்ட காலம் இந்தியச் சிறைகளில் அடைபட் டுக்கிடந்ததற்கும் அவர்களே காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துவருகிறார்.
இத்தகைய ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பின் சார்பில் இலங்கையில் கருணா தரப்பினருடன் இணைந்து இயங்குவதற்காக விஜயன் இந்தி யாவில் இருந்து அனுப்பப்பட்டார். இவர் திரு கோணமலையைச் சேர்ந்தவர். அவரது சொந் தப் பெயர் கார்த்திகேசு பேரின்பம். முன்னாள் புளொட் உறுப்பினரான இவர்ää பின்னர் இலங் கையில் ஈ.என்.டி.எல்.எவ். உடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் இந்தியா சென்று சேலம் தம்பம்பிட்டி அகதி முகாமில் வசித்து வந்தார் என்று கூறப்பட்டது.
விஜயன் இலங்கை வந்ததும் கருணா தரப்புடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார். தான் ஒரு மூத்த உறுப்பினர் என்பதனால் அமைப்பின் சில பொறுப்புக்கள் தன்னிடமே தரப்படவேண்டும் என்று அவர் கேட்டார். இத னால் கருணாதரப்பினருடன் அவருக்கு அதி ருப்தி ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் மாளிகாவத்தைää போதிராஜா மாவத்தையிலுள்ள விகாரையிலும் கருணா தரப்பு தங்கிச் செயற்படுவதற்கு சிங்களக் கட்சி ஒன்று ஒழுங்குகளைச் செய்து கொடுத் திருந்தது.
இந்த விகாரையில் வைத்தே கருணா தரப்பினைச் சேர்ந்த இனிய பாரதிக்கும் ராஜ ரட்ணத்துக்கும் இடையில் அண்மையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன என்று தெரி விக்கப்படுகின்றது. விஜயனின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருணா அணியினருக்கும் ஈ.பி.டி.பியினருக்கும் உள்ள தொடர்புகள் பற்றி யும் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் ராஜரட்ணம் புதிதாக அமைக்கப்பட்ட அமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதாகக் கருணாவிடம் கூறியுள்ளார்.
எனவே கருணா தரப்பிற்கு ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பினால் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் சில பொருள்களை திருப்பித்தரவேண்டும் என் றும் கருணா தரப்பிடம் ராஜரட்ணம் அழுத்திச் சொல்;லியிருக்கிறார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்தே ராஜரட்ணம் காணா மற் போனார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கருணா தரப்பினரே இவரைக் கடத்திச் சென் றிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.
தம்மிடம் பெரும் எண்ணிக்கையான ஆள் கள் இருக்கிறார்கள் என்று கூறிää ஈ.என்.டி.எல். எவ். அமைப்பிடம் இருந்து கருணா குழுவினர் பெரும் தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஆனால்ää கருணா தரப்பால் தரப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்று விஜயன் இறுதியில் கண்டுபிடித்துவிட்டார் என் றும் கூறப்படுகின்றது. ராஜரட்ணம் கடத்தப்பட்; டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்ட

நன்றி: புதினம்.கொம்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by Sriramanan - 10-14-2004, 08:32 AM
[No subject] - by kuruvikal - 10-14-2004, 10:04 AM
[No subject] - by ThamilMahan - 10-14-2004, 07:02 PM
[No subject] - by Sriramanan - 10-15-2004, 12:04 AM
[No subject] - by cannon - 10-15-2004, 02:28 AM
[No subject] - by Nitharsan - 10-15-2004, 02:42 AM
[No subject] - by Vannam - 10-15-2004, 06:15 PM
[No subject] - by Thusi - 10-15-2004, 06:38 PM
[No subject] - by cannon - 10-15-2004, 09:31 PM
[No subject] - by கறுணா - 11-25-2004, 08:53 PM
[No subject] - by கறுணா - 11-25-2004, 09:53 PM
[No subject] - by MEERA - 11-26-2004, 02:07 AM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:06 AM
[No subject] - by Sabesh - 11-28-2004, 10:03 PM
[No subject] - by cannon - 11-29-2004, 03:28 AM
[No subject] - by கறுணா - 11-29-2004, 04:12 AM
[No subject] - by Rajan - 11-30-2004, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)