11-29-2004, 01:55 AM
hari Wrote:குருவிகளே என்னுடய உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் எனக்கு கொடுக்கதெரியவில்லை மன்னிக்கவும், என்னுடைய உணர்வுகளின் கவிதை வடிவம் உங்கள் இருவரின் கவிதையில் உள்ளது. என்னால் கவிதை எழுத தெரிந்திருந்தால் இந்த கொடுமைக்கு காரணமானவர்களை கவிதையால் சுட்டெறித்திருப்பேன். குணம் அறிந்து கொடுக்கவில்லை ஆண்டவன் அந்த வரத்தை.
Quote:காணதா கடவுளுக்காய்...
கண்ட இடம் எல்லாம் சண்டை
கண்ணால் கண்ட இந்த
காட்சியை போக்க ஆள் இல்லை..??
Quote:காக்கை குருவி
கழுகு குரங்கு
ஒற்றுமை காணீர்
பகுத்தறிவில்லா ஜீவன் அனைத்தும்
பகுத்தாய
மனிதன் மட்டும்
திறன் இழந்தான்
விலங்கிலும் கேடாய்....!
படைப்பாளிகளை விட படிப்பவனே பலதும் அறிகிறான்...அந்தளவில் எங்கள் எல்லோரையும் விட நீங்கள் அதிகம் படிக்கிறீர்கள்...அறிகிறீர்கள்...! அதுதான் உங்களுக்கு இந்தத் தன்னடக்கம் Hari...மன்னா நீங்கள் மக்களுக்கு நல்ல உதாரணமும் கூட...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

