Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகக் கும்பலின் கட்சி உருவான செய்தி 100 வீதம் உண்மையே
#15
Quote:ஈ.என்.டி.எல்.எப். பொதுச் செயலாளர் மர்மமான முறையில் காணவில்லை
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2004, 16:08 ஈழம் ஸ
ஈ.என்.டி.எல்.எப். என்ற ஆயுதக்குழுவின் பொதுச் செயலாளரும் கருணாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான மனோ மாஸ்டர் எனப்படும் பா.இராஜரத்தினம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

கடந்த பல வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்த மேற்படி நபர், கருணாவை வைத்து அரசியல் நடத்தும் முயற்சியில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நாடு திரும்பி தமது குழுவை புனரமைப்புச் செய்வதில் ஈடுபட்டு வந்தார். ஈ.என்.டி.எல்.எப். குழு இந்திய புலனாய்வு நிறுவனங்களுடன் தொடர்புடையது என்பது இங்கு நோக்கத்தக்கது.

மேற்படி குழு, கருணாவுடன் சேர்ந்து தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்ததாகவும், அதற்கு மேற்படி மனோ மாஸ்டர் என்பவரே இணைப்பாளர் என்றும், முகவரியற்ற கடிதத் தலைப்புகளில் இங்குள்ள ஊடகங்களுக்கு மர்மமான முறையில் அறிக்கைகள் அனுப்பி வைத்ததாகவும் தெரியவருகின்றது.

ஜே.வி.பி. போன்ற இனவாதக் கட்சிகள் மற்றும் ஈ.பி.டி.பி போன்ற அரச ஆதரவு ஆயுதக் குழுக்கள் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களிலும் பத்திரிகையாளர் மகாநாட்டிலும் கருணா சார்பு பிரதிநிதியாக இவர் கலந்து கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவரது மெய்காப்பாளரான ரங்கப்பா எனப்படும் சனிபோய் ஒக்கர்ஸ் எலிசன் தெமட்டகொடவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்;டார். இதன் பின்பே இவர் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன விடயம் மர்மமாக இருக்கின்றது என்பதுடன் பல்வேறு ஊகங்களும் இதுபற்றி நிலவுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய கருணா ஆரம்பத்தில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அரவணைப்பில் இருந்தார். இதன் காரணமாக ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கருத்து முரண்பட்டுக் கொண்டதுடன், யாழ் நகரில் டக்ளசிற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதுடன் அக்குழுவிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நேரடியாக கருணாவை ஈ.பி.டி.பி. பகிரங்கப்படுத்த முடியாத நிலை தோன்றிய போது, ஈ.என்.டி.எல்.எப். என்ற ஆயுதக்குழுவுடன் இணைந்து செயற்பட முடிவெடுக்கப்பட்டது.

எனினும், தற்போது மீண்டும் கருணா - டக்ளஸ் இணைந்து செயற்படும் விடயம் உறுதியாகியுள்ளதாகவும், இதன் காரணமாக ஈ.என்.டி.எல்.எப்.ற்கும் கருணாவிற்கும் ஏற்பட்ட முறுகலின் எதிரொலியாகவே இவர் கடத்தப்பட்டிக்கலாம் என ஒரு தகவல் கூறுகின்றது.

இன்னுமொரு தகவல் இவர் வேறு யாராவது ஒரு தரப்பினரால் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றது. இந்த விவகாரம் தொடர்ந்தும் மர்மமாக இருக்கும் போதும், இது குறித்து ஈ.என்.டி.எல்.எப். ஆயுதக்குழுவும் மௌனமாக இருக்கின்றது.

நன்றி: புதினம்.கொம்
Reply


Messages In This Thread
[No subject] - by Sriramanan - 10-14-2004, 08:32 AM
[No subject] - by kuruvikal - 10-14-2004, 10:04 AM
[No subject] - by ThamilMahan - 10-14-2004, 07:02 PM
[No subject] - by Sriramanan - 10-15-2004, 12:04 AM
[No subject] - by cannon - 10-15-2004, 02:28 AM
[No subject] - by Nitharsan - 10-15-2004, 02:42 AM
[No subject] - by Vannam - 10-15-2004, 06:15 PM
[No subject] - by Thusi - 10-15-2004, 06:38 PM
[No subject] - by cannon - 10-15-2004, 09:31 PM
[No subject] - by கறுணா - 11-25-2004, 08:53 PM
[No subject] - by கறுணா - 11-25-2004, 09:53 PM
[No subject] - by MEERA - 11-26-2004, 02:07 AM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:06 AM
[No subject] - by Sabesh - 11-28-2004, 10:03 PM
[No subject] - by cannon - 11-29-2004, 03:28 AM
[No subject] - by கறுணா - 11-29-2004, 04:12 AM
[No subject] - by Rajan - 11-30-2004, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)