Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன செய்யும் ?... - தொ. சூசைமிக்கேல்
#1
<span style='color:red'>என்ன செய்யும் ?...</span>
- தொ. சூசைமிக்கேல்


போர்முகங்கள் கண்டவனே! பொன்ஈழம் கொண்டவனே!
பொற்காலம் வாராமல் என்ன செய்யும்?
ஆர்மகளோ, ஆர்மகனோ நமதுடைமை அபகரித்த
அவலங்கள் மாறாமல் என்ன செய்யும்?


வையமெங்கும் புகழோங்க வளர்தமிழை வளர்த்தவனின்
வரலாறு திரும்பாமல் என்ன செய்யும்?
வெய்யமதிப் பொய்யர்அணி வீழ்ந்துபட, ஈழமகன்
விரும்பியது அரும்பாமல் என்ன செய்யும்?


அன்னையிடம் உண்டதமிழ்ப் பால், தனது வீரத்தை
அடையாளம் காட்டாமல் என்ன செய்யும்?
கண்ணெதிரே என்னுதிரம் விண்ணதிரக் கதறியழும்
காட்சியெனை வாட்டாமல் என்ன செய்யும்?


சொந்தமண்ணில் அந்நியனாய்த் துவள்பவனின் துயர்கண்டு
சொந்தமனம் பொங்காமல் என்ன செய்யும்?
வெந்தபுண்ணில் வேல்செருகும் வீணருக்கு விதிசெய்து
விரட்டாமல் காலம்இனி என்ன செய்யும்?


ஈழநிலத் தோழர்குலம் சூழவலம் வந்துபடில்
எதிரிகளின் சதிகள்நமை என்ன செய்யும்?
தோளுயர்த்தி வாளுயர்த்தித் தூயபடை ஒன்றுபடில்
துன்னலர்தம் இன்னல்நமை என்ன செய்யும்?


என்னருமைத் தளபதியே! உன்னையென்றன் கவியுள்ளம்
எண்ணியெண்ணி வாழ்த்தாமல் என்ன செய்யும்?
முன்னர்எமை வாழவைத்த முதியதமிழ் வீரத்தை
முத்தமிட்டுப் போற்றாமல் என்ன செய்யும்?


தம்பிதனை நம்பிஈழத் தமிழ்க்குலமே திரண்டிருக்க,
தடைபோடும் படைகள்இனி என்ன செய்யும்?
ஐம்பதென்ன, நூறாண்டு அவன்வாழ்வான்: அன்னவனின்
ஆணைஇனி வெல்லாமல் என்ன செய்யும்?

(நன்றி: ரமேஸ்)
<img src='http://img85.exs.cx/img85/9227/untitled704.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
என்ன செய்யும் ?... - தொ. சூசைமிக்கேல் - by hari - 11-27-2004, 06:02 PM
[No subject] - by kavithan - 11-27-2004, 10:59 PM
[No subject] - by tamilini - 11-27-2004, 11:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)