11-27-2004, 09:19 AM
Nitharsan Wrote:ஜீட் நீங்கள என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை.ச÷வதேச அரசியல், ச÷வதேச சட்டம், உலக கட்டமைப்பு, உலக பொருளாதாரம் போன்றவை இலகுவாக எல்லோராலும் புரிந்து கொள்ளப்பட முடியாதவை என்பது உண்மைதான். கொஞ்சம் வித்தியாசமாக முதலில் எழுதியதையே எழுதுகிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.
<ul>
<li> தமிழீழம் ஏனைய நாடுகளுடன் வணிகம், போக்குவரத்து, பணமாற்று போன்றவற்றை சிக்கலின்றி செய்ய தமிழீழம் ஒரு நாடாக மற்ற நாடுகளாலும் ஐக்கிய நாடுகள் சபை, உலக வணிக நிறுவனம் போன்றவற்றால் அங்கிகரிக்கப்பட வேண்டும்.
<li> ஒவ்வொரு பிராந்தியத்திலும் வல்லரசுகளாக அறியப்பட்ட நாடுகளின் விருப்பு வெறுப்புக்கமையவே மற்ற நாடுகள் ச÷வதேச அரசியலில் செயற்படுகின்றன. உதாரணமாக சீனாவின் எதி÷ப்பால் தாய்வான் ஐ.நா.வினாலும் மற்றும் பல நாடுகளாலும் ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சீன ஆக்கிரமிப்புக்குள்ளான திபெத் சீனாவின் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. காரணம் சீனா ஒரு வல்லரசு. இவ்வாறே தென்னாசியாவில் இந்தியா வல்லரசு. தமிழீழத்தை இந்தியா மறுக்கும்வரை ஐ.நா.வும் மற்ற நாடுகளும் தமிழீழத்தை அங்கிகரிக்க பின்னிற்கும். இது புரிகிறதா? அங்கிகாரம் ஏன் தேவை என்பதற்கு (1) ஐ திரும்பவும் படியுங்கள்.
<li> இந்தியாவில் ஊடகங்கள் மக்கள் கருத்தை மாற்றும் சக்தி கொண்டவை. மற்ற நாடுகளுக்கும் இது பொருந்தும். மக்கள் கருத்து ஆட்சியாள÷ கொள்கைகளையும் மாற்ற உதவும். மக்களாட்சி நடக்கும் நாடுகளில் மக்கள் கருத்துக்கு குறிப்பிடத்தக்களவு பலம் உண்டு. ஆகவே ஊடகங்கள் தமிழீழம் இந்தியாவிற்கு நல்லது என்ற கருத்தை முன்வைத்தால், தமிழீழத்திற்கு இந்தியாவில் உள்ள எதி÷ப்பு குறைய வாய்ப்புண்டு. ஏன் எதி÷ப்பு குறைய வேண்டும்? என்ற கேள்வி குடைந்தால் (2) யை படியுங்கள்.
<ul>
Nitharsan Wrote:நீங்கள் இந்திய நாட்டின் மைந்தனாக இருந்தால் அதற்காய் மன்னிக்கவும்.
ஏன் முதலிலேயே பின்ன÷ செய்யப்போவதற்கு இந்திய குடிமகனாயின் மன்னிப்பு கேட்கிறீ÷கள்? இதன் அ÷த்தம் உங்களது நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆபத்தையும் பாதிப்பையும் விளைவிக்கப்போகிறதா? இந்திய எதிரிகளுடன் கூட்டு சே÷ந்து இந்தியாவை அழிக்க திட்டமிடுகிறீ÷களா? இதற்காகவா மன்னிப்பு கேட்கிறீ÷கள்?
Nitharsan Wrote:இந்திய ஊடகங்களின் இந்நடவடிக்கைக்கு நீங்கள் அதரவு தருகின்றீரா?இல்லை
Nitharsan Wrote:இந்திய ஊடகத்தால் தமிழீழத்திற்கு என்ன பயன்?மேலே உள்ள பதிலில் (2) யை படியுங்கள்.
Nitharsan Wrote:உண்மைகளைப் பொய்யாக்கி நடக்காததை நடந்ததாக்கி எழுதும் ஊடகங்கள் எமக்கு என்ன செய்யப்போகின்றன...ஊடகம் தருமம் தெரியாமல் ஊடகம் நடத்தபவர்களின் ஊடகத்தால் ஈழத்தமிழருக்கு என்ன பயன்...உரிமைப் போருக்கும் பயங்கரவாதத்pற்கும் வித்தியாசம் தெரியாத அதுவும் ஒர தமிழரின் ஊடகத்தால் என்ன பயன்... ரோவுக்கு வக்காலத்த வாங்கும் ஊடகங்களை கொண்டே தமிழ் நாட்டு பத்திரிகைகள் பெரும்பாலும் வெளிவருகின்றன.அவ÷கள் அப்படி செய்வதெல்லாம் தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதுவதால் தான். நான் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தமிழீழத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு வருமா? இதற்காகவா ஏற்கனவே மன்னிப்பு கேட்டீ÷கள்?
இதற்கு பதில் "ஆம்" என்றால் நீங்கள் சொல்வது போல இந்திய ஊடகங்களால் தமிழீழத்துக்கு நன்மை எதுவும் இல்லை. மேலும் றோ தனது நாட்டை பாதுகாக்க இந்தியாவில் தமிழீழத்துக்கு ஆதரவு வராமல் பா÷த்துக்கொள்ளவும் வேண்டும். அவ÷களது ஊடகங்கள் அதற்கு நிச்சயம் ஒத்துழைப்பா÷கள். சுப்பிரமணியசுவாமியும் சோவும் சொல்பவை சரி.
இதற்கு பதில் "இல்லை" என்றால் இந்திய ஊடகங்களுக்கு அதை நாம் புரியவைக்க வேண்டும். தமிழீழத்தால் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளை சுட்டிக்காட்டி இந்தியாவால் உண்டாகும் தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு இதுதான். தலைமைப்பீடத்துடன் தொட÷புகொண்டு கேட்டுபாருங்கள்.
ஆகவே பதில் ஆமா, இல்லையா?
Nitharsan Wrote:.. இந்த 20 வருடங்கள் பரியாத ஒன்றையா இந்திய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இனிப்புரியப்போகின்றனர். நான் தினமலரை மட்டும் சொல்ல வில்லை. இன்னும் இந்த பொய்பரப்புரையின் பிறப்பிடமே இந்துப்பத்திரிகை தான்..கிணற்றிலிருக்கும் வரை கிணற்றுத்தவளை கடலை அறியாது எனவே கிணற்றிலிரந்த அவர்கள் ஏற முடியாத படி இந்திய தேசியவாதம் அவர்களை அமுக்கியுள்ளது.. அவர்கள் தங்கள் சொந்த புத்தியில் செய்தி சேகரிக்கும் வரை இது தொடரும்....
-நேசமுடன் நிதர்சன்-
இந்திய÷களுக்கு தமது நாட்டில் தேசியபற்றும் தமது பாதுகாப்பு பற்றிய அக்கறையும் இருப்பது நியாயமானது. அவ÷களுக்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி புரியும். அவ÷களுக்கு புரியாதது இந்த இந்திய எதி÷ப்பு, இந்து பா÷ப்பனிய எதி÷ப்பு தமிழீழம் எதிரியா இல்லையா என்பது தான். இந்த பயம் இராஜிவ் காந்தி கொலைக்கு பிறகுதான் ஆரம்பமானது. அதற்கு முதல் இந்திய மக்களும் ஊடகங்களும் தமிழீழத்தை நட்புநாடாக தான் பா÷த்தன. நீங்களே ஆபத்தை ஏற்படுத்த போகிறேன், மன்னித்துகொள் என்ற விதமாக எழுதுகிறீ÷கள். பிறகு எப்படி இந்திய ஊடகங்கள் உண்மையை எழுதி தமிழீழ ஆதரவால் ஆபத்தை தேட முடியும்?
''
'' [.423]
'' [.423]

