11-27-2004, 03:07 AM
தாலாட்டும் தாய் மடியும்
கூடாகிப் போனதோ
தாய் முலைதானும்
வற்றிப் போனதோ
ரவைக்குப் பஞ்சமில்லாத் தேசத்தில்
இரைக்கு ஏங்கி வாடுதோ நாற்று.....!
பிணந்தின்று பழகியது
உயிர் சொச்சம் கண்டும்
தன்னோடு தர்மம் காத்து
ஒதுங்கி இருக்குது...!
பிறப்பில் மானிதரெல்லாம் புறந்தல்ல
போக்கிடமின்றி
மனிதம் மண்டியிடுகிறது
பூமித்தாயிடம்...!
நேற்று வன்னியில்
சிங்களத்தான் தடை போட
என் உறவும் வாடியது மறவேன்...!
வேட்டோடு வேட்டைக்கு அலையும்
மனித மிருகங்கள்
கொடும்பசி தீரும் நாளும் வாராதோ
நிறத்தோடு இனம் மதம் சாதி
பிரிவினையும் ஓயாதோ....!
காக்கை குருவி
கழுகு குரங்கு
ஒற்றுமை காணீர்
பகுத்தறிவில்லா ஜீவன் அனைத்தும்
பகுத்தாய
மனிதன் மட்டும்
திறன் இழந்தான்
விலங்கிலும் கேடாய்....!
இயற்கையை வென்றானாம்
விஞ்ஞானம் படைத்தானாம்
ஆன்மீகமாம் அரசியலாம்
நாகரீகமாம் உச்சியாம்
அனைத்தும் இருந்தும் என்ன பயன்...!
உயிர்கள் அனைத்தும்
அணைத்து அரவணைக்கும்
அன்பு தொலைந்ததே....!
ஊருக்கு ஊர் வேலி போட்டு
வேற்றுமை வளர்க்கிறான்
இயற்கையா தந்த ஒரு பூமி
கூறுகளாய் குண்டுகளின் வாழ்விடமாய்...!
ஈயமும் கந்தகமும் காற்றோடு கலக்க
சுவாசம் கூடப் பஞ்சமாகுது
குடி நீரும் நஞ்சாகுது
நாளை வாழ்வென்பது
கருவறையோடும் சாத்தியமாமோ....???!
தனக்குத்தானே குழி தோண்டும்
மானிடனே கேள்....!!!!!
அன்பின் கனதி அற்றுப் போவதற்கு
இது ஓர் சாட்சி...!
மனிதம் வாழ
மாசில்லா அன்பு வேண்டும்
இன்றேல்...
நாளை நாகரிகத்தின் காலடியில்
இது நிகழும்
அன்று மனிதம் காக்க
மனிதரும் இரார்
மனிதனின் பெயரால்
பாவங்களும் இராது
பூமி மட்டும் நீயின்றி
நிம்மதியாய் சுழலும்....!
கூடாகிப் போனதோ
தாய் முலைதானும்
வற்றிப் போனதோ
ரவைக்குப் பஞ்சமில்லாத் தேசத்தில்
இரைக்கு ஏங்கி வாடுதோ நாற்று.....!
பிணந்தின்று பழகியது
உயிர் சொச்சம் கண்டும்
தன்னோடு தர்மம் காத்து
ஒதுங்கி இருக்குது...!
பிறப்பில் மானிதரெல்லாம் புறந்தல்ல
போக்கிடமின்றி
மனிதம் மண்டியிடுகிறது
பூமித்தாயிடம்...!
நேற்று வன்னியில்
சிங்களத்தான் தடை போட
என் உறவும் வாடியது மறவேன்...!
வேட்டோடு வேட்டைக்கு அலையும்
மனித மிருகங்கள்
கொடும்பசி தீரும் நாளும் வாராதோ
நிறத்தோடு இனம் மதம் சாதி
பிரிவினையும் ஓயாதோ....!
காக்கை குருவி
கழுகு குரங்கு
ஒற்றுமை காணீர்
பகுத்தறிவில்லா ஜீவன் அனைத்தும்
பகுத்தாய
மனிதன் மட்டும்
திறன் இழந்தான்
விலங்கிலும் கேடாய்....!
இயற்கையை வென்றானாம்
விஞ்ஞானம் படைத்தானாம்
ஆன்மீகமாம் அரசியலாம்
நாகரீகமாம் உச்சியாம்
அனைத்தும் இருந்தும் என்ன பயன்...!
உயிர்கள் அனைத்தும்
அணைத்து அரவணைக்கும்
அன்பு தொலைந்ததே....!
ஊருக்கு ஊர் வேலி போட்டு
வேற்றுமை வளர்க்கிறான்
இயற்கையா தந்த ஒரு பூமி
கூறுகளாய் குண்டுகளின் வாழ்விடமாய்...!
ஈயமும் கந்தகமும் காற்றோடு கலக்க
சுவாசம் கூடப் பஞ்சமாகுது
குடி நீரும் நஞ்சாகுது
நாளை வாழ்வென்பது
கருவறையோடும் சாத்தியமாமோ....???!
தனக்குத்தானே குழி தோண்டும்
மானிடனே கேள்....!!!!!
அன்பின் கனதி அற்றுப் போவதற்கு
இது ஓர் சாட்சி...!
மனிதம் வாழ
மாசில்லா அன்பு வேண்டும்
இன்றேல்...
நாளை நாகரிகத்தின் காலடியில்
இது நிகழும்
அன்று மனிதம் காக்க
மனிதரும் இரார்
மனிதனின் பெயரால்
பாவங்களும் இராது
பூமி மட்டும் நீயின்றி
நிம்மதியாய் சுழலும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

