11-26-2004, 10:30 PM
"1985"ல் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை போராட்ட இயக்கங்கள் இடையே ஓர் கூட்டு ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் விடுதலைப் புலிகள், ஈரோஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன அடங்கியிருந்தன. இக்கூட்டு முயற்சியின் முதாலாவது கூட்டமானது அத்தனை இயக்க தலைவர்களும் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. அக்கூட்டத்திற்கு முற்கூட்டியே பாலகுமார், சிறீ சபாரட்னம், பத்மநாபா வந்து விட்டு தங்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து விட்டார்களாம். என் தலைவன் அதே கூரிய நேரிய பார்வையுடனும், நிமிந்த மிடுக்கான நடையுடனும் வரும்போதாம் ஏனைய மூவரும் தம்மையறியாமலேயே எழுந்து நின்றார்களாம். அன்றே அவர்கள் சூரியத்தேவனின் ஆளுமையை உணர முற்பட்டிருக்கிறார்கள்.
இச்சம்பவமானது, இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிப்படைகளுக்கெதிராக போரிட்ட "ரஸ்ய", "அமெரிக்க", "பிரித்தானிய" தலைவர்களான "ஸ்ராலின்", "ரூஸ்வேல்ட்", "சேர்ச்சில்" ஆகியோரின் சந்திப்பானது ரஸ்யாவில் இடம்பெற்றிருந்ததாம். அச்சந்திப்பிலாம் இதே மாதிரியான சம்பவம் அங்கும் இடம் பெற்றிருந்ததாம். அக்கூட்டதற்கு ஸ்ராலின் வந்தபோது ரூச்வெல்டும், சேர்ச்சிலும் தம்மையறியாமல் எழுந்து மரியாதை செய்தார்களாம். பின் தமக்குள்ளேயே வெட்கப்பட்டுக் கொண்டார்களாம்.

"
"
"