11-26-2004, 02:53 PM
தினமலர் செய்தி
வேலுõர் : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்த தினத்தை "மாவீரர் தின'மாக இன்று தமிழ்த் தீவிரவாத அமைப்புகள் கொண்டாடுகின்றன. வேலுõர் சிறையில் உள்ள புலிகள் ஆறு பேரும் இன்று ஒன்று சேர்ந்து கொண்டாட அனுமதி பெற்றுள்ளனர்.
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26ல் ஆண்டுதோறும் மாவீரர் தினமாகவும், தமிழர் எழுச்சி தினமாகவும் பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. இந்தாண்டு மாவீரர் தினத்தில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன வீரப்பன் மற்றும் கூட்டாளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, மாவீரர் தினத்தை கொண்டாடுவதாக உளவுத் துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று பிரபாகரன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவதற்கு வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலி கைதிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சிறைத்துறை நிர்வாகத்திடம் அனுமதியும் பெற்றுள்ளனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலுõர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். வேலுõர் மத்திய சிறையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் ஆறு பேரும் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க அந்த பகுதியில் சுழல் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் இன்று பிரபாகரன் பிறந்த நாள் என்பதை அறிந்த சிறை நிர்வாகம் வேறு தினத்தில் ஒன்று சேர்வதற்கு அனுமதிப்பதாக கூறியது. இதை புலிகள் தரப்பில் ஏற்கவில்லை. வேறு வழியின்றி அனுமதி வழங்கியுள்ள சிறை நிர்வாகம், புலிகள் மீதான கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.