Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Ҧǡð üí¸ôÀ¡ ÁÕ¾¡¨É¢ø ¦¸¡¨Ä
#7
<b>ஜேவிபியின் திட்டமிட்ட வெறியாட்டத்தால் பதற்றம்: திருகோணமலையில் ஊரடங்கு சட்டம் அமுல்! </b>

திருகோணமலை நகரில் இன்று மாலை சிங்கள பௌத்த பேரினவாதிகளினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பதற்ற நிலையையடுத்து பிற்பகல் 3.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை அங்கு பொலிஸ் ஊரடங்குச்; சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் ஏற்றப்பட்டுள்ள தமிழீழத் தேசியக் கொடியை அகற்றக் கோரியும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இது தொடர்பான நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும் ஜே.வி.பியினர் இன்று திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறீலங்கா நாடாளுமன்ற ஜேவிபி உறுப்பினர் ஜயந்த வீரசேகர தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மணிக்கூண்டு கோபுர சந்தியிலிருந்து புறப்பட்டது. போர் நிறுத்தக் கண்கானிப்புக் குழு என குறிப்பிடப்பட்ட உருவ பொம்மையையும் நோர்வே தேசியக் கொடியையும் தங்களுடன் அந்த கும்பல் எடுத்துச்; சென்றது.

விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் நினைவாலயம் அமைந்துள்ள இந்து கலாச்;சார மண்டபம் வீதி வழியாக போர் நிறுத்த கண்கானிப்புக் குழு அலுவலகத்தை நோக்கிச்; சென்ற ஆர்ப்பாட்டக் கும்பலை அவ்வீதி வழியாக செல்ல அனுமதி மறுத்து பொலிஸார் தடுத்தனர்.

அப்போது பேரினவாதக் கும்பல் பொலிசாரை நோக்கி கற்களை வீசி வீதித் தடைகளை அகற்ற முயன்றனர். பொலிசார் தடியடிப் நடத்தி கண்ணீர்ப புகைக் குண்டுகளை வீசினர்.

ஆத்தரமடைந்த பேரினவாதிகள் தங்களுடன் எடுத்து வந்த உருவபொம்மையையும் நோர்வே கொடியையும் அந்த இடத்திலேயே தீ வைத்து வெறியாட்டம் ஆடினர்.

இப்படி திட்டமிட்டு ஜேவிபியினரால் உருவாக்கப்பட்ட பதற்றத்தையடுத்தே திருகோணமலை நகர பிரதேசத்தில் ஊரடங்குச்; சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-25-2004, 06:09 PM
[No subject] - by kuruvikal - 11-25-2004, 06:31 PM
[No subject] - by tamilini - 11-25-2004, 06:36 PM
[No subject] - by வெண்ணிலா - 11-25-2004, 06:37 PM
[No subject] - by paandiyan - 11-26-2004, 09:15 AM
[No subject] - by Kanani - 11-26-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)