11-26-2004, 03:03 AM
நன்றி வீரகேசரி .....
எனது கணவரை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுத்தருவதில்
அரசு அசட்டை; சிறுபான்மையினர் என்பதால் இந்நிலையா?
தினேஷ் தர்மேந்திராவின் மனைவி கவலை
(அ.கனகராஜா)
எனது கணவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை மீட்பதில் அரசாங்கம் அசட்டையாக செயல்படுகின்றது. கட்சி பேதங்களை மறந்து இலங்கையர் என்ற ரீதியில் எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட தினேஷ் தர்மேந்திராவின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்:
நோன்பு பெருநாளுக்கு பின்னர் எனது கணவர் விடுதலையாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த போது எனது குடும்பமே சந்தோஷமடைந்தது. ஆனால் இன்றுவரை அவருக்கு என்ன நடந்துள்ளது என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை.
எனது கணவரின் விடுதலை குறித்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு மூன்று கடிதங்களை எழுதிய போதிலும் அக்கடிதம் கிடைத்துவிட்டது என்று கூட ஜனாதிபதி செயலகத்திலிருந்து எனக்கு பதில் கிடைக்கவில்லை.
எனது கணவரின் விடுதலை தொடர்பாக வெளிவிவகார அமைச்சும் ஏனைய பொது அமைப்புகளும் அரசியல் வாதிகளும் ஆரம்பத்தில் காட்டிய கரிசனை நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது.
ஈராக்கில் யுத்தம் காரணமாக தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக சில முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் ஏனைய நாட்டு தீவிரவாதிகள் எவ்வாறு விடுதலைச் செய்யப்பட்டனர்.
எனது கணவர் வேலை செய்த குவைத் நாட்டு கம்பனிக்காரர்கள் தீவிரவாதிகள் என்ன கேட்டாலும் தருவதாக கூறிவருகின்றனர்.
இந்நிலையில் கணவரை விடுதலைச் செய்வதற்கு அரசாங்கம் கொடுக்கின்ற அழுத்தம் போதாது என்றே கருதுகிறேன்.
எனது கணவரை விடுதலை செய்வதற்கு அழுத்தம் கொடுக்கும் படி மூன்று பிள்ளைகளுடன் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன். ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பதற்கான ஏற்பாட்டை யாராவது மேற்கொள்ள வேண்டும் என்றார்.

" "