11-25-2004, 06:43 PM
வடபகுதியை தங்கள் கைக்குள் நெடுநாள் வைத்திருக்க முடியாது என்று அஞ்சும் இலங்கை அரசு அதை தந்திரமாக இந்தியாவின் கையில் தற்காலிகமாக ஒப்படைக்க நினைக்கிறது. கடந்த மாதம் டெல்லிவந்த சந்திாிகா புத்த காயாவிற்கு சென்றாரோ இல்லையோ இதை மீண்டும் மீண்டும் பேசி இந்திய தரப்பில் ஆசைகளை மூட்டிவிட்டுள்ளார். அது மட்டுமன்றி இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது பற்றியும் தான் ஆலோசிப்பதாக கூறியிருக்கிறார். இது எல்லாம் பார்க்கும் போது தற்றகாலிகமாக இந்திய வல்லரசின் பாதுகாப்பில் இலங்கை வடபகுதியை ஒப்படைக்க நினைக்கிறாரோ என தோன்றுகிறது.
இரண்டு வாரங்களில் அமைதிபேச்சுக்கு திரும்பவேண்டும் என்று தான் நல்ல பிள்ளை போல கெடுவிடுத்துள்ளார். இந்த மாதிாி செய்திகளை ராம் போன்றவர் பிரசுாித்து இந்திய தமிழ் மக்களின் மனதில் தவறான ஒரு எண்ணத்தை தோற்றுவிக்க நினைக்கின்றனர். யாழ் மாணவர்கள் விடுத்த வேண்டுகோள் இங்கு பத்திாிகையில் வெளிவந்தது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. இதைப்போல படித்தவர்கள் தன்னார்வ அமைப்புகள் அவ்வப்போது குரல் கொடுக்க வேண்டும். இது நிச்சயமாக வெளிப்படையாக இந்தியா உதவுவதை தடுக்கும்.
இருந்தபோதும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை வைத்திருக்க என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்யும் என்பதில் ஐயம் இல்லை. ஆனாலும் இந்திய தமிழர்கள் ஆதரவு எமக்கு இருக்கும்.