Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா -இலங்கை ராணுவ ஒப்பந்ததுக்கு எதிர்ப்பு...!
#1
இந்தியா - இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா டெல்லி வந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்தை சீரமைத்துக் கொடுக்கவும், இலங்கையின் போர்க் கப்பல்களை பழுதுநீக்கித் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டது.

வைகோ எதிர்ப்பு :

இதை மதிமுக பொதுச் செயலாளர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக கடந்த 10ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்.

அப்போது மன்மோகன் சிங்கிடம், யாழ்ப்பாணத் தமிழர்களை ஒடுக்க இலங்கை ராணுவம் பலாலி விமானத் தளத்தைத்தான் பயன்படுத்தியது. அதை இந்தியா சீரமைத்துக் கொடுப்பது இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மீண்டும் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சண்டை ஏற்பட்டால், பலாலி விமான தளத்தை தமிழர்கள் மீது தாக்குல் நடத்த இலங்கை ராணுவம் பயன்படுத்தும். எனவே இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்ப்பு :

இந் நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதே பிரச்சினையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், தேசியச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் எழுப்பினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்ற அக் கூட்டத்தில் பேசிய தமிழரான ராஜா, இலங்கையுடன் ராணுவ உடன்படிக்கை செய்வது நல்லதல்ல. பலாலி விமான தளத்தை சீரமைத்துக் கொடுப்பது யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு பாதகமாக அமையும். அது தமிழ்நாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

நார்வே தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் வேளையில் இந்தியா சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் ராஜா.

அதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த உடன்படிக்கை விவாத நிலையில்தான் உள்ளது. இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றார்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், வைகோ ஏற்கெனவே இப் பிரச்சினை குறித்து எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார் என்றார்.

thatstamil.com

-------------------------------------------

புலம் வாழ் தமிழீழத் தமிழர்களே... இப்படி ஒன்று நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு.... இதைத்தடுக்க என்ன குரல் கொடுத்தீர்கள்...நீங்களே சிந்தித்துப் பாருங்கள்... நீங்கள் கொடுக்கும் பணத்தை முயற்சிகளை அரை நொடியில் சீரழிக்க வல்ல பலம் இந்த ஒப்பந்தங்களுக்கு இருக்கு என்பதை மறந்துவிடாதீர்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்தியா -இலங்கை ராணுவ ஒப்பந்ததுக்கு எதிர்ப்பு...! - by kuruvikal - 11-25-2004, 02:38 PM
[No subject] - by hari - 11-25-2004, 03:45 PM
[No subject] - by MEERA - 11-25-2004, 10:33 PM
[No subject] - by shiyam - 11-26-2004, 03:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)