11-24-2004, 02:15 AM
இன்று மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிகொண்டிருக்கும் போது வான் ஒன்றில் வந்த இருவர் என்னை அழைத்து ஓர் டிஜிற்ரல் கமறாவை காண்பித்து 350 டொலர் வாங்குகிறாயா என கேட்டார்கள். நானும் கிட்ட போய் பார்த்தேன் அது ஓர் Canon EOS 6.3MP Digital Rebel Camera கமரா. அதன் சந்தைப்பெறுமதி கிட்டத்தட்ட 1200 டொலர்கள். நானும் நினைத்தேன் அதிஸ்டம் என்பது இப்படியா அடிக்க வேண்டும் என.... எல்லாம் புதிது போல பக்கிங் சுப்பராக இருந்தது. கமறாவை எடுத்து கையில் தந்தார்கள் பார்க்கும்படி. ஆனால் கமறா பொலித்தீனினால் சுற்றி இறுக்கமாக ஒட்டப்பட்டிருந்தது. நான் அப்பொலித்தீனை அவிழ்க்க முற்பட்ட போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்... "நீ வாங்காமல் விட்டால் தாங்கள் மற்றவர்க்கு விற்க முடியாதாம் என" இவ்வளவு நேரமும் ஏமாந்த சோனகிரியாட்டம் நின்ற எனக்கு அப்போ தான் மூளையில் ஏதோ பொறி தட்ட ஆரம்பித்தது. பின்னர் கமறாவை உற்று பார்த்தேன் அது ஓர் உண்மையான கமறாவே கிடையாது. அது ஓர் விளையாட்டுப்பொருள். அப்போ தான் என் அதிஸ்டம் என்னை விட்டு விலகியதையும் அதே சமயம் நேரவிருந்த துரதிஸ்டம் விலகியதையும் புரிந்து கொண்டேன்.
இப்படியான சம்பவங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ நடந்திருந்தால் இங்கே அறிய தாருங்களேன் :!: :!:
இப்படியான சம்பவங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ நடந்திருந்தால் இங்கே அறிய தாருங்களேன் :!: :!:

