07-30-2003, 02:29 PM
செய்தி அறிக்கை: 29-07-03
<span style='font-size:25pt;line-height:100%'>கனேடியத் தமிழர்களைக் கூறுபோட சிறீலங்கா சதியா? பூலோகசிங்கம் அதற்குத் துணையா?</span>
--------------------------------------------------------------------------------
1983ம் ஆண்டு கறுப்பு யுூலையின் போது சிறீலங்கா அரசின் புூரண ஆதரவோடு தமிழினத்திற்கு எதிராக சிங்களக் காடையாகள் மேற்கொண்ட பாரிய படுகொலை மற்றும் உடமை அழிப்பு இவற்றின் இருபதாவது நினைவு நாள் இன்று. பதின் மூவாயிரத்துக்கும் மேலான தமிழர்களை மிருகத்தனமாக முறையில் வீதிகளில் எரித்தும், பச்சிளம் பாலகர்களை இரண்டாகப் பிளந்தும், பெண்கள், சிறுமியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியும் பின் படுகொலை செய்தும் தனது இனவெறிப் பசியை சிங்களம் தீர்த்துக் கொண்ட நாள் இது. அத்தோடு பல ஆயிரம் கோடி ருபா பெறுமதியான தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து சிங்களம் கோரவெறி ஆடிய நாள் இது.
அறப் போராட்ஙகள் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முயன்ற தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட 1956, 1958, 1977, 1979, 1981 இனக்கலவரங்களின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட 1983 யுூலை இனக்கலவரம் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் புூரண அனுசரணையுடன், அவர்களது படைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழர் குடியிருப்புக்கள், வணிக நிறுவனங்கள் அடையாளமிடப்பட்ட வாக்காளர் பதிவேடுகள் சிங்களக் காடையர்களுக்கு வழங்கப்பட்டே இக் கோரத்தனம் அரங்கேற்றப்பட்டது. கருப்பு யுூலையை நினைவு கூரும் இந்நாளில் நாம் கனடாவில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வுபற்றிய விடயத்தை கவனத்திற்கெடுக்க வேண்டியுள்ளது.
இக் கறைபடிந்த கறுப்பு யுூலையின் 20வது நினைவு நாளின் சரியாக ஒருமாதத்தின் பின்ளர் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதியை 'சிறீலங்கா நாள்" என்ற பெயரில் கொண்டாட ரொறன்ரோவிலுள்ள சிறீலங்காவின் நலன்பேண் பிரிவு (ஊழளெரடயவந ழுககiஉந) ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இலங்கைத் தீவிலுள்ள சகல இனங்களும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்கின்றனர், குறிப்பாக தாயக மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டவே நடத்தப்படுகிறது.
இந் நிகழ்வை நடாத்துவதற்கான முன்னேற்பாடுகளை சிறிலங்காவின் நலன்பேண் பிரிவின் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட திரு. புூலோகசிங்கம் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் யாவும் சிறீலங்காவில் இனங்களுக்கு இடையே சிக்கல்கள் எதுவும் இல்லை, அவர்கள் எல்லோரும் மிகவும் ஒற்றுமையாகப் பின்னிப் பிணைந்து இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மாயையை தோற்றுவிக்க எடுக்கப்படும் முயற்சியாகவே இது தென்படுகிறது.
சிறீலங்கா அரசுகள் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விட்ட வன்முறை வெறியாட்டம் காரணமாகவே 250,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்தார்கள். சிறீலங்காவின் இரு இனங்களிற்கிடையேயான பகையென்பது ஏதோ உலகிற்குத் தெரியாத ஒன்றல்ல. இரு இனங்களும் ஒற்றுமையாக இருந்தால் நோர்வே, ஜப்பான், கனடா உட்பட அனைத்துலக நாடுகள் இலங்கைத் தீவின் இரு தரப்பின் தலைமைகளிடையேயும் மாறி மாறி செல்ல வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.
இரண்டு தரப்பினருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி 17 மாதங்களாகி விட்டன. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாமல் சிறீலங்கா அரசு காலத்தைக் கடத்தி வருகிறது. ஓப்பந்தத்தில் உள்ள விடயங்களே நடைமுறைப்படுத்தப்படாத போது, பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டவற்றின் கதி என்ன என்பதை நீங்களாகவே உணர முடியும்.
சிறீலங்காவால் மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர்ச்சியான போர் காரணமாக 70,000க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்பகுதிகளிற்கான புனரமைப்பு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழர் தாயகத்தை சிங்களப்படைகள் தமது ஆக்கிரமிப்பின் கீழேயே இன்னமும் வைத்துள்ளன. உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சிறீலங்காப் படைகள் தமிழர்களின் குடியிருப்புக்களை தொடர்ந்து ஆக்கிரமித்து நிற்கின்றன.
மறுபுறத்தே, தமிழினத்தை மேலும் அழிக்கும் நோக்கோடு 20 மில்லியன் டொலர் செலவில் ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கிக் குவிக்கப்படுகிறது. உக்கிரேனிலிருந்து 3000க்கும் மேற்பட்ட இரசாயன ஆயுதங்களும் வாங்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் பேரை இராணுவத்தில் புதிதாக சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்த காலத்திலேயே சிறீலங்கா அரசு போர்க் கலங்களை, போர் ஆயுதங்களை வாங்குவதில் முனைப்புக்கொண்டு நிற்கிறது.
எனவே, இனங்களிற்கு இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமாயின் முதலில் திரு. புூலோகசிங்கம் வடகிழக்கு மீது போடப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதற்கும், தமிழீழப் பிரதேசத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கம் தனது வெல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, சிறீலங்காக் குடியுரிமையைத் துறந்து, கனேடிய குடிமக்களாக மாறியுள்ள கனேடியத் தமிழர்களின் அலுவல்களில் தலையிடுவது வரம்பு மீறிய செயலாகும்.
இதில வேடிக்கை என்னவென்றால் சிறீலங்காவின் இனவாதத்திற்கு சமீபத்தில் இலக்கானவர் திரு. புூலோகசிங்கம் தான். ஆனால் அவரது அடிமை விசுவாசம் அதனை இலகுவாக மறக்கச் செய்துள்ளது. தமிழர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக, முக்கிய அமைச்சர் ஒருவரே அவரது பதவிக்கு ஆப்பு வைத்ததையும், அவர் வகித்த உயர் பதவிகளிலிருந்து தூக்கியெறியப்பட்டதையும் திரு. புூலோகசிங்கம் வெகு குறுகிய காலத்தில் மறந்துவிட்டார். மேலும் திரு. புூலோகசிங்கம் அவர்களைவிடச் சேவை மூப்பும் அனுபவமும் குறைந்த ஒருவர் ஒட்டாவாவில் தூதுவராகப் பணியாற்ற அவரின் கீழ் தரமிறக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டிருப்பதை அவர் இலகுவாக மறந்து விட்டார்.
எனவே திரு. புூலோகசிங்கம் தனக்கு சிங்கள இனவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு முதலில் தீர்வு காண முயல வேண்டும். இனவாதத்தின் கோரப்பற்களுக்கு இரையான ஒருவர் இனங்களின் ஒற்றுமைக்கு விழா எடுப்பது எவ்வளவு வேடிக்கையானது என்பது சொல்லாமலே விளங்கும். அவரின் பிரச்சினையைக் கதைப்பதற்கே அவர் தமிழ்த் தேசிய முன்னணிப் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாட வேண்டி இருந்ததை மறந்து விடக்கூடாது. அவரை நாம் கேட்டுக் கொள்வது தயவு செய்து இங்கே ஒரு இராஜதந்திரிக்குரிய வரப்புக்குள் அவரது செயற்பாடுகளை உள்ளடக்குங்கள் என்பதுதான்.
எனவே, அனைத்துலகமும் இரண்டு தரப்புக்களாக அடையாளம் கண்டுள்ள கொழும்பு கிளிநொச்சித் தலைமைகள் இனச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வரை தமிழர்களைக் கூறுபோடும் சதித் திட்டங்களை அவர் மேற்கொள்ளக்கூடாது. ஒரு இராஜதந்திரி என்ற வகையில் செயலாற்றுவதே அவரது பதவிக்கு அழகான செயலாகும். விருந்துகளையும், விழாக்களையும் வைத்து உங்களால் ஒரு தன்மானத் தமிழனையும் விலைக்கு வாங்கமுடியாது. சிறீலங்காவின் மேடைகளிற்கும், விருந்துபசாரங்களிற்கும் வழிந்து சேவகம் செய்யும் நிலையில் தமிழ் ஊடகவியளாளர்கள் இல்லை என்பதை அவர்களே உங்களுக்;குப்; புரிய வைப்பார்கள்.
கனேடியக் குடிமக்களான தமிழீழத் தமிழர்களையே தமது வாசகர்களாகவும், நேயர்களாகவும் கொண்டுள்ள தன்மானத் தமிழ் ஊடகவியளாலர்கள் தங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். தமிழர்களை இரண்டுபடுத்த நடக்கும் இம் முயற்சியில் விலாங்குப் போக்கோடு செயற்படும் ஒரு சில தமிழ் ஊடகங்கள் மிகவும் அவதானமாக நடக்க வேண்டும் என்பதே எமது தயவான வேண்டுகோள்.
எனவே உணர்வுள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் திரு.புூலோகசிங்கம் அவர்களால் நடத்தப்படும் ''சிறீலங்கா நாள்"" மற்றும் யுூலை 31ல் நடக்க இருக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு இரண்டையும் புறக்கணிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
கனடா பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள்;, பட்டதாரிகள் குழு
தமிழர் தேசிய அமைப்பு
தொடர்புகளுக்கு: 00 1 905 201 4964
செய்திக்குறிப்பு பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: feedback@tamilnaatham.com