11-22-2004, 05:54 PM
என்னைக்கேட்டால் இது யாகூ தூதுவரின் பிழையல்ல மாறாக அதை உபயோகிப்போரின் தவறு. நானும் யாகூ தூதுவரைப் பாவிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது வெகு உபயோகமான கருவி. பழைய நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போகாமல் இருக்க, தொலைபேசிக்கட்டணம் இல்லாமலே தூர இடத்தில் இருப்பவருடன் உரையாட மற்றும் அவசர செய்தி அனுப்பவென இதன் பயன்கள் சொல்லி முடியாது.
உங்கள் பிள்ளை யாகூ தூதுவரால் கெடுகிறது என்றால் அது உங்கள் வளர்ப்பில் பிழையேயொழிய யாகூவின் தவறல்ல.
முன்பு திரைப்படம் கெடுக்கிறது என்றார்கள். பின்னர் தொலைக்காட்சி என்றார்கள், அதன்பின்னர் இன்ரநெட் என்றும் சொன்னார்கள் இப்போ யாகூவில் வந்து நிக்கிறார்கள். அதனால், காலத்துக்கு காலம் ஏதாவதொன்றைச்சாட்டிப் புலம்புவதை விட்டு உங்கள் பிள்ளைகளுக்கு சரி எது தவறு எது என்பதைச் சுட்டிக்காட்டி வளர்க்கப்பாருங்கள்.