Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததில் ரசித்தது
#22
kuruvikal Wrote:இதென்ன கதை... ஒருவனைக் காதலிக்க முதல்தான் தீர்மானிக்க வேண்டும் நல்லவனா கெட்டவனா என்று... அப்படித் தீர்மானிக்காமல் எப்படிக் காதல் என்று தீர்மானிக்கிறீர்கள்...! தேவைக்கு ஏற்ற மாதிரிப் பயன்படுத்துவதற்காகவா...! அப்ப அது காதல் இல்ல...!

அதைத்தானே சொன்னம் நாங்களும்.. காதலிக்க தொடங்கு முன்னரே யோசிக்கிறான்... யோசிச்சு செய்தால் எப்படி தோல்வி வரும் சொல்லுங்கள்.. ஏன்க காதல் என்கிறது ஒரு நாளிலையோ இல்லை ஒரு இரவிலையோ முளைக்கிறதா..?? அரும்பும் போதே.. அதனால் ஏற்படுகின்ற.. ஏற்படப்போகின்ற.. பிரச்சனைகளை புரிந்து.. நடந்தால் எந்த தோல்வியும் வராது.. அதை தான் நாம் சொன்னம்..
நாங்கள் பாத்திருக்கிறம்.. ஊரும் தெரியாது பெண்ணின் குணம் எதுவும் தெரியாது.. காதலிப்பினம்.. பாத்தா.. பெண்ணுக்கோ ஆணைப்பற்றி ஏதும் தெரியாது.. காதல் என்பிம்.. எந்த அடிப்படையில அந்த காதல் வருது..

Quote:ஒருவனுக்குள் ஒருத்தியை ஒருத்திக்குள் ஒருவனை பற்றி எழும் ஏதோ ஒரு ஈர்ப்புத்தான் காதலாக மாற்றுகிறது...! காதல் வந்த பின் அதை வெளிப்படுத்தாது மனதோடு வைத்துவிட்டு பிறகு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி மனம் மாற்றி மறுக்கிறது காதல் அல்ல....! அது காதல் என்ற பெயரில் நடக்கும் ஏதோ ஒன்று...சுயநலத்துக்குத் தீனி....!

ஏங்க மனதோடை வைத்து சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற மாதிரி மாத்திறதில்லை.. சந்தர்ப்பத்தினால் சொல்ல முடியாமல் போற சந்தர்பங்களும் இருக்கு.. அதைவிட ஒரு தடவை காதல் வந்தால் அது எப்பவும் மாறாது.. சும்மா அடிக்கடி.. ஒருத்தியைக்கண்டதும் காதலிக்கிறது.. இல்லை ஒருத்தனைக்கண்டதும் காதலிக்கிறது.. பிறகு இன்னொருவரைக்காதலிக்கிறது.. இதுக்கெல்லாம் காதல் இல்லை இது ஒரு இனக்கவர்ச்சி தான்.. ஒழுங்கா பக்குவப்பட்ட ஒரு மனசில காதல் வருது என்றால்்.. அந்த காதல் அலுங்குபிடி மாதிரி விடாது.. எப்பவும் ஒன்றாய் இருக்கும்.. அடுத்தது.. ஒரு தடவை பெண்ணோ ஆணோ பிடிக்கல காதலிக்கல என்றால்.. பிறகும் அவர்கள் பின்னால திரியுறது.. பண்ணாத கூத்தெல்லாம் பண்ணுறது.. இதுகள் எல்லாம் செய்ய மாட்டினம்..!

Quote:காதலிச்சாலும் ஆராய்ந்த பின்தான் இறுதி முடிவு... பிடிக்காட்டி விலகிடுவம்...ஆண் தன்வழியே போக வேண்டியதுதான்"

காதலிச்சாலும் ஆராய்ந்த பின் தான் இறுதி முடிவில்லை காதலிக்க முதல் முடிவெடுக்கனும்.. முடிவெடுத்தபின் விலக முடியயாது...


Quote:உண்மையாகக் காதல் கொண்டவன் தன் காதலியின் பிரிவு தாங்காமல் வாடுவது சகஜம்... பறவைகளே வருந்தும் போது மனிதன்...???! அதை செய்யாதே என்று கட்டுப்படுத்த பெண்களுக்கு உரிமையில்லை....! Idea

வாடுவது.. ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்யும் அது ஆணுக்கும் மட்டும் இல்லை பெண்ணுக்கு தான் பொருந்தும்.. ஆனா அதையே நினைச்சுக்கொண்டிருக்கிறது.. சுத்த பயித்தியக்கார தனம்.. எப்ப காதலிக்க என்று வெளிக்கிடுறியளோ அப்பவே இவைகள் எல்லாத்தையும் சந்திக்க தயாராகிட வேணும் எதையும் சந்திக்க எதிர்கொள்ள துணிவிருக்கணும்.. ஏன் என்றால் நாம் காதலிக்கிறவர்கள் கண்டிப்பா எங்களை காதலிப்பார் என்று சொல்ல முடியாது.. அப்படி இல்லாமல் போற சந்தர்ப்பங்களும் இருக்கில்லையா...??

Quote:ஆண்கள் தங்கள் மனதை வெளிப்படையாக பிரதிபலிப்பர் அது பெண்களுக்கு ஆற அமர்ந்து யோசித்து முடிவெடுக்க சந்தர்ப்பம் அளிக்கிறது...ஆனால் ஆண் தான் கொண்ட காதலுக்காக பெண் என்பவளை தனது அன்புக்கு முன்னால் ஆராய முற்படவில்லை.... கொண்ட காதலை பொய்யாக்க நினைக்கவில்லை...இப்போ புரியுதா...உங்கள் வாயாலேயே நீங்களே சொன்னியள் "

கடைசி வரைக்கும் கூட வரப்போற ஒருவனை தெரிவு செய்வதில் அவள்.. ஆராய்ச்சியில் ஈடுவடுறதில என்ன தப்பு சொல்லுங்கள்.. இப்ப பாருங்கள் ஒருவன் சும்மா தொடர்பில்லாமல் இருக்கும் போது எந்தப்பெண்ணுக்கும் அவனைப்பற்றி ஆராய வேண்டிய அவசியம் கிடையாது.. அவன் எப்ப அவளது வாழ்வில பங்கெடுக்கிற நிலையில வந்திட்டான் என்றால் கண்டிப்பா அவனைப்பற்றி ஆராயனும்.. அப்ப தான் உண்மையா அவர்களது வாழ்வு சந்தோசமாய் இருக்கும்.. இப்ப பாருங்கள் ஆண்கள் அன்பை வெளிப்படையா வழங்கலாம். ஆனால் அவர்கள் குணம் பழக்க வழக்கம் ஏதும் தெரியாமல் காதலிக்க வெளிக்கிட்டு விட்டு பிறகு.. கண்ணீர் விட எந்தப்பெண்ணும் விரும்ப மாட்டாள்.. தப்பான ஒரு காதலை தெரிவு செய்தவுடன்.. அதனால் பாத்க்கப்பட போறது.. கூடிய பாகம் பெண் தான்.. சும்மா ஆண்கள் இப்படி கண்ட படி காதிச்சு.. இப்ப கஸ்டப்படுற பெண்களும் இருக்கினம் ஆண்களும் இருக்கினம்..


குருவிகள் வார்த்தைகளால்.. சொல்லாமல் உணர்வுகளால்.. எண்ணங்களால் ஒன்று பட்டு வாழ்கிற காதலும் இருக்கு.. அதுகள் எல்லாம் பாத்தவுடன் காதல் கிடையாது.. பல நாள் பழகிய பின்.. புரிந்துனர்வின்.. உச்சக்கட்டமாய் இருக்கலாம்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 11-20-2004, 12:49 AM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 12:04 PM
[No subject] - by thaiman.ch - 11-20-2004, 12:16 PM
[No subject] - by ratha - 11-20-2004, 04:42 PM
[No subject] - by ரவி - 11-20-2004, 07:23 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 08:01 PM
[No subject] - by ரவி - 11-20-2004, 08:04 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 08:06 PM
[No subject] - by kavithan - 11-20-2004, 09:25 PM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 09:36 PM
[No subject] - by sinnappu - 11-20-2004, 10:16 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 10:17 PM
[No subject] - by tamilini - 11-20-2004, 10:18 PM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 10:31 PM
[No subject] - by kavithan - 11-20-2004, 10:35 PM
[No subject] - by kuruvikal - 11-20-2004, 11:43 PM
[No subject] - by tamilini - 11-21-2004, 01:34 AM
[No subject] - by kuruvikal - 11-21-2004, 02:05 AM
[No subject] - by ரவி - 11-21-2004, 03:26 PM
[No subject] - by tamilini - 11-21-2004, 04:54 PM
[No subject] - by kuruvikal - 11-21-2004, 07:31 PM
[No subject] - by வெண்ணிலா - 11-22-2004, 12:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)