11-21-2004, 01:34 AM
Quote:பெண்கள் பொய்தான் சொல்வார்கள் அதிகம்...சுற்றிவளைத்துத்தான் பேசுவார்கள்... நேரடியாக ஒரு விடயத்தை அணுகமாட்டார்கள்.... தங்கள் கருத்தை தயங்கித் தயங்கித்தான் சொல்வார்கள்... மற்றவர்கள் தங்களை குறைவாக எடை போட்டுவிடுவார்கள் என்ற பயத்தில்...அது தவறு... மற்றவர்களுக்காக உங்கள் நியாயங்களை ஏன் மறைக்க வேண்டும்...அவை சமூகத்துக்கு நியாயம் இல்லாது தெரிந்தாலும்..இல்ல... ஆண்களுக்கு நியாயமில்லாமல் தெரிந்தாலும்...!
ஒருவன் ஒரு பெண்ணைக்காதலிக்கும் போது.. அவன் அவளும் தன்னைக்காதலிக்க வேணும் என்று தான் எதிர்பார்ப்பான்.. அப்ப அந்த பெண் அதை மறுத்து என்ன சொன்னாலும் அவனுக்கு அது பொய் போல தான் தோன்றும் .. இது ஆணுக்கு மட்டும் இல்லை பெண்ணுக்கும் பொருந்தும்.. பெண்கள் சுற்றிவளைத்து பேசுவாள் என்றில்லை.. ஆதியில் இருந்து பெண்ணானவள்.. வெட்கம் நாணம் கொண்டு வளர்க்க.. வளர்வதனால்.. நேரடியாக.. ஒரு ஆண் காதலைச்சொல்ல ஏற்றுக்கொண்டாலும் அதனை வெளிப்படுத்த தெரியாதவளாய்.. வெட்கம் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்..அதுவும் இப்ப குறைவு.. காதலித்தால் பெண்களே நேரில போய் சொல்லுற நிலமை வந்திட்டுது.. இதை எத்தினை நாளைக்கு சொல்லுவியள்..??
அதைவிட பெண்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்னங்க இருக்கு.. ஒருவனைக்காதலிக்க முதல் ஆதாவது காதலை சொன்ன உடன் யாரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள்... ஏன் என்றால் சும்மா தெரியாதவர்கள் அறியாதவர்கள் வந்து காதல் சொல்ல அதை ஏற்றுக்கொள்ள.. சும்மா விடயம் கிடையாது.. அதற்கு ரைம் எடுக்கலாம்.. ஏன் என்றால் இது அவளது வாழ்க்கைப்பிரச்சனை.. 100 வருடம் வாழப்போற வாழ்க்கையை ஒரு நாளில் தெரிவு செய்தோ முடிவோ எடுக்க முடியாது.. அதற்கு பெண்கள் ரைம் கேட்பதில் என்ன தவறு.. அவள் உடனே பதில் சொல்லவில்லை என்றால் காதலிப்பாதாய் அர்த்தமா..?? சில நாட்கள் யோசித்து விட்டு பிடிக்கல என்றால் .. சரியான ஆண் என்றால் விலகிடுவான்... அதைவிட்டுவிட்டு... தாடி வைக்கிறது அது பண்ணுறது பொய் சொல்லுறாள் என்கிறது இவைகள் எல்லாம் பெண்கள் பற்றிய ஆண்களின் தவறான் பார்வைகள்.. நாங்கள் பாத்திருக்கம்.. பெண்களுக்கு பின்னால திரிவினம்... மாட்டன் என்று பெண் சொன்னவுடன்.. செய்யாத கூத்து எல்லாம் செய்வினம்.. இதுகள் எல்லாம் செய்தாவது காதலை வரவைக்க வேணும் என்று நிப்பினம் அப்படி வாற காதல் காதலாவா இருக்கும்.. ?? என்னவோ.. இதுகளும் இப்படியும் நடக்கிது.. பலர் பட்டதை சொன்னம் அவ்வளவு தான்.. இவற்றை பகுத்து அறிந்து விலகி நடக்கிறது தான்.. ஒரு சிறந்த மனிதனிற்கு அழகு.. அப்படி என்று நாம் நினைக்கிறம்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

