07-29-2003, 01:59 PM
ஆயிரக்கணக்கான இந்து பக் தர்கள் நேற்று கீரிமலையில் தீர்த்த மாடி பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.ஆடி அமாவாசை விரதநாளான நேற்று குடாநாட்டில் பல பகுதிகளிலும் இருந்து சென்ற பக்தர்களால் கீரிமலை பகுதி சனத்திரளாகக் காட்சியளித்தது.உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கும் கீரிமலைப் பகுதிக்கு செல்வதற்காக பலநு}ற்றுக்கணக்கான பக்தர்கள் காலை 6.00 மணிமுதல் தெல்லிப்பழை மற்றும் சேந்தாங்குளம் சோதனை நிலையங்களின் முன்பாகத் திரண்டனர்.
கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் செல்லும் பக்தர்கள் 7.00 மணிக்குப் பிறகு படையினர், சோதனையின் பின் னர் பஸ்களில் செல்ல அனுமதித்தனர்.வழமைபோன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களுடன் கூடவே படையினரும் உடன் சென்றனர்.சேந்தாங்குளம் சோதனை நிலையம் ஊடாக சிறிய வாகனங்களிலும் சைக்கிள்களிலும் பக்தர்கள் செல்வ தற்கு முதலில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேரங்களின் பின்னர் சைக் கிள்களில் செல்வது நிறுத்தப்பட்டது.சிறிய ~ஹைஏஸ்| ரக வான்களில் பக்தர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால், பெரும் எண்ணிக்கையானோர் குடும்பம் குடும்பமாக கீரிமலை போய்ச் சேர்ந்தனர்.மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு காலை 9.00 மணியளவில் கீரிமலை யில் தீர்த்தமாட எழுந்தருளினார். கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் சுவாமியும் ஒன்றாக தீர்த்தமாட வீதி வலம் வந்த காட்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
பெரும் எண்ணிக்கையானோர் நீராட வந்ததால் கேணியில் போதிய நீர் காணப்படவில்லை. இதனால், பலரும் கடலில் இறங்கி நீராடினர். கீரிமலைக் கடலில் இறங்கி நீராட படையினர் வழமையாக அனுமதிப்பதில்லை. என்றாலும் நேற்று பக்தர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை அங்கு காணப்பட்டது.
யாழ்.நகரில் இருந்து வலி.வடக்கு பகுதிகளுக்கான பஸ் சேவைகள் நேற்று தெல்லிப்பழை சேந்தாங்குளம் சோதனை நிலையங்கள் வரை நீடிக் கப்பட்டிருந்தன. பஸ்களிலும் தங்கள் சொந்த வாகனங்களிலும் பக்தர்கள் கீரிமலைக்கு வந்திருந்தனர். நு}ற்றுக் கணக்கான மினி வான்களும், ஓட் டோக்களும், கார்களும் அங்கு காணப் பட்டன.புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து தாயகம் வந்துள்ள குடும்பங்களை அதிக எண்ணிக்கையில் அங்கு காண முடிந்தது.வழமைபோன்று தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தி னர் தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாகசாந்தி செய்தனர். தனியார் வர்த் தகர் ஒருவரும் அடியார்களுக்கு ~கோப்பி| வழங்கும் சேவையை அங்கு ஏற்பாடு செய்திருந்தார்.கீரிமலைக்குச் செல்லும் வீதிகளில் அதிக எண்ணிக்கையில் படையினரும் பொலீஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சாரணர்களும், சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்களும் அங்கு சேவை புரிந்தனர்.