11-19-2004, 12:11 PM
thaiman.ch Wrote:குருவிகளே நீங்கள் யதாா்த்தத்தை சொல்கிறீா்களா?
தமிழீழம் கிடைக்காது என்ற உங்கள் கருத்து யதாா்த்தமா???
குருவிகளே தமிழீழம் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியொன்று இருக்கின்றது. ஆனால் கடவுள் என்ற ஒன்று இருக்கின்றது என்று நீங்கள் நிருபியுங்களேன்.
இங்கே வாழ்கிறவா்கள் தாயகத்தில் உள்ள கோயில்களிற்கு உதவி செய்கிறாா்கள் என்று என்னுடன் முரண் படுகிறீா்கள். ஏன் நீங்கள் உங்க கோயில் நடத்துகிறவங்களுக்கு அதை சொல்றீங்கள் இல்லை. உங்க வாங்க மாட்டம் என்டு கோயில்கள் சொன்ன இங்க எப்படியய்யா குடுப்பாங்க?
முதலில் எழுதுறத ஒழுங்கா வாசிக்க தமிழ் தெரியுமா...இல்ல விடிய விடிய இராமாயணம் சொல்லியும் விடிஞ்சு இராமர் சீதைக்கு என்ன முறை என்று கேக்க சித்தி எண்டது போல...இருக்கிற உங்கட கதைக்கு கதை எழுதிறது தப்புப் போலத் தெரியுது...!
தமிழீழம் எங்களுக்கும் தெரியும்... எழுத்தில.... நிஜத்தில எட்ட இன்னும் பலத எட்ட வேணும் அதுக்கு புலம் தாயகம் எண்ட பிரிவு தேவையில்ல எல்லோரும் ஒரே மக்களாய் ஒற்றுமையோட ஒன்றாக ஒரே இலச்சியத்திற்காய் உழைக்க வேண்டும்...அப்பதான் அது சாத்தியம்... நான் காசு கொடுப்பம் களத்துக்குப் போமாட்டன் என்றோ..நான் காட்டிக் கொடுப்பேன் தமிழீழம் தேவையில்லை என்றோ..நான் களம் போவேன் காசு பெறமாட்டேன் என்றோ நான் அகிம்சா மூர்த்தி ஆயுதம் தொடேன் என்றோ நான் ஆயுதம் தான் தூக்குவன் அரசியல் பேசேன் என்றோ இருந்தால்...உங்கள் எங்கள் தமிழீழம் கனவுதான்....!
உங்களுக்கு கடவுள் சிலையாகத் தெரியலாம் இல்ல தெரியாமல் விடலாம் எங்களுக்கு அம்மா அப்பா சகோதரங்கள்...நல்ல மனிதர்கள்.. நல்ல உயிரினங்கள் இவையாவும் கடவுளாத் தெரியுது...அது எங்கள் சுய சிந்தனைக்குரியது...சுய விருப்பமும் கூட....!
நீங்கள் கொடுக்க அவர்கள் வாங்க... அவர்கள் கொடுக்க நீங்க வாங்க...ஏதோ வியாபாரம் நடந்தால் சரி... உதில சொல்லுறத்துக்கும் ஒன்றுமில்ல...சொல்லிப் பிரயோசனமும் இல்ல....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

