11-19-2004, 11:24 AM
ASWINI2005 Wrote:குருவிகளின் வாதம் சரியானதே. ஆயினும் குருவிகளின் யதார்த்த சிந்தனை இளைஞனாகிய தாய்மண்ணின் சிந்தனை வாய்க்காலுக்குத் தடையாக எண்ணுவது தவறானது தாய் மண்.
ஒரு விடுதலைப்போராட்டம் வெற்றிபெற விடுதலைக்கனவு மட்டும் விடுதலையைப் பெற்றுத்தராது. குறிப்பிட்ட சிலரது கட்டிடம் கட்டிக்கொடுப்பதாலோ , அல்லது குறிப்பிட்ட சில உதவிகள் மட்டும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வலுவைத் தராது.
ஆனால் தாய்மண் போன்ற இளையவர்களின் இத்தகைய சிந்தனைகளை; வரவேற்கப்பட வேண்டும் குருவித்தாத்தா.
குழந்தைகளின் கனவுகள் , கற்பனைகளை முளையில் கிள்ளியெறிவதை முதலில் பழசுகளாகிய நீங்கள் (யதார்த்தவாதிகள்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.
18வயது இளைஞனுக்கும் , 35வயது உங்கள் போன்ற ஆண்மகனுக்கும் வித்தியாசம் இருக்கிறது குருவிகாள்.
சிறுவர்கள் , .இளைஞர்கள் ,யுவதிகள் என்றால் எங்கள் கிடுகுவேலிக்கனவுகள் எங்களுக்குள் வருகிறது. கிடுவேலியை விட்டு நவீன யுகத்தையும் கொஞ்சம் சிந்திப்போமா ?
'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" இப்பாடலைப் பாரதி பாடியபோது பாரதம் விடுதலை பெறாமலே இருந்தது. ஆனாலஇ பாரதி விடுதலைபெற்றதாய் கனவுகண்டான். அதற்காக பாரதியின் கனவுதான் பாரதத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று வெட்டிக்கதை பேசவரவில்லை.
இளையோரின் சிந்தனைகளுக்கு வடிகாலமைத்துக் கொடுப்பது பழையோர்களின் கடமை. குருவிகளே உங்களுக்கும்தான்.
இளைஞர்களின் சிந்தனை என்பது மலை உச்சியில் ஆரம்பிக்கும் ஆற்றின் ஊற்றுப் போன்றது... அது தெளிவானதாய் சரியான பாதையில் ஓடினால் தான் பேராறாகும்...இல்ல கிளை ஆறுகளாகி சிற்றாறாகி சீரழிய வேண்டியதுதான்.... சிந்தனைகள் தோன்றும் வேளையில் அதை திசைப்படுத்த அல்லது தானே தன் சிந்தனைகளை தர்க்கித்து திசைப்படுத்த இளைஞனுக்கு தெரிந்திருக்க வேண்டும்...நியாயங்கள் அநியாயங்கள் சாத்தியங்கள் அசாத்தியங்கள் சூழ்நிலைகள் சந்தர்ப்பங்கள் என்று தன்னை நோக்கி வரும் ஒவ்வொன்றையும் பற்றி தன்னால் இயன்ற மட்டில் பகுத்தாயும் திறனைக் கொண்ட இளைஞன் மட்டும் சிந்தனைகளால் சீரான வழியில் வழிப்படுத்தப்படுவான்....! எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞன் ஆன ஒருவனுக்கு இலட்சியம் என்ற ஒன்று இருக்க வேண்டும்...ஆற்றுக்கு இலக்கு பள்ளத்தில் இருக்கும் கடல் போல... இளைஞனுக்கும் இலச்சியம் இருக்க வேண்டும்...அது உயர்ந்ததாய் அவனுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளதாய் அமைய வழி காட்ட வேண்டியது சமூகத்தின் கடமை...அதனால்தான் நாம்... நாம் தரிசித்த யதார்த்தத்தைச் சொல்கின்றோம்...அதில் தேவையானதை ஆராய்ந்து பெற வேண்டியதைப் பெறுவது அந்த இளைஞனின் கடமை....!
முக்கிய குறிப்பு ... குருவிகளுக்கு நீங்கள் குறிப்பிட்ட வயதில்லை....அதை அடைய இன்னும் காலம் இருக்கு....! அதுபோக குருவிகள் நாங்கள் கிடுகு வேலியும் பாத்திருக்கிறம்..முட்கம்பி வேலியும் பாத்திருக்கிறம்..சுத்து மதிலும் பாத்திருக்கிறம்.. சுத்த பனிக்கட்டியும் பாத்திருக்கிறம்..இன்னும் பார்க்காமலும் பலது இருக்கு...! :wink:
<b>அனுபவங்கள் அவையா வரும் வரை காத்திருந்தால் வயதாகும் நாமே தேடிப்போனால் அவை விரைந்து கிடைக்கும்...!</b> - இது குருவிகள் பொலிசி:wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

