11-19-2004, 10:51 AM
thaiman.ch Wrote:குருவிகளே
நீங்கள் சொல்கின்ற இந்த அமெரிக்கா, இந்தியா, நோா்வே எல்லாம் எப்பொழுதையா வந்தாா்கள்? விடுதலைப்போராட்டத்தில் இவா்களின் பங்கு என்னய்யா? அமெரிக்கா, யப்பான், இந்தியா எல்லாம் உங்கள் மீது அக்கறை எடுத்தாய்யா உங்களிற்கு உதவி செய்ய வருகிறது? ஆசியாவில் யாா் வல்லாதிக்கம் செலுத்துவது என்பது இவா்களிற்குள் போட்டி. அதற்கு களமாக இலங்கைப்பிரச்சனையை பாவிக்கிறாா்கள். இது விளங்காமல் நீங்கள் இன்னும் அவா்கள் உங்கள் நலனுக்காக வந்தவா்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறீா்கள்.
குருவிகளே, தமிழா் புணா்வாழ்வுக்கழகம், பெருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ விளையாட்டுத்துறை என்று நாங்களும் தாயகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் இணைந்து தான் செயற்படுகிறோம். அவா்கள் எங்களை வேறாகப்பாா்க்கவில்லை. உங்களை மாதிரி சில ...... தான் இப்படி எங்களையும் தாயகத்தையும் பிரித்துப்பாா்க்கிறீா்கள்.
நீங்கள் நாங்கள் பிறக்க முதலே வெள்ளைக்காரனுக்கு விளங்கித்தான் காலணித்துவம் முதல் இன்று வரைக்கும் அங்க கண் வைச்சு நிக்கிறான்..... உங்களுக்குத்தான் உங்கட மண்ணின் மகிமை புரியாமல் நிற்கிறீர்கள்...!
நீங்களே உங்களைப் புலம் பெயர் மக்கள் என்று புறம்பு காட்டிக் கொண்டு இப்ப எங்களைச் சொல்லுங்கோ நாங்கதான் புலம் என்று வரையறுத்ததென்று... ஏன் புலம்பெயர் மக்கள் என்று சொல்கிறீர்கள்... புலம் வாழ் தமிழீழ உறவுகள் என்ற உண்மையச் சொல்லலாமே....அல்லது புலத்தோடு தாயக உறவுகள்... புலத்தில் தாயகம்...இப்படி பலவாறு சொல்லலாமே....அதென்ன புலம் பெயர் மக்கள்... சிறீலங்காவுக்குள் புலம் பெயர்ந்தால் அகதி என்றியள்... நீங்க மட்டும் வித்தியாசமோ...???! அப்ப அவை புலம்பெயர் மக்கள் இல்லையோ... புலம் என்றால் வெளிநாடு என்று எந்த அகராதியில் இருக்கு....!
அதுமட்டுமல்லாமல்...அங்க தாயக மக்கள் போராடுவார்களாம்... சண்டை பிடிப்பார்களாம்...விடுதலை பெறுவார்களாம்...நாங்கள் காசனுப்பிப் போட்டு... தமிழீழம் கிடைச்ச உடன அபிவிருத்திக்குப் போவோமாம்...அதுவரை கை கட்டி இருக்கலாமாம்... ஏனென்றால் அங்க சண்டை பிடிக்கிறது ஏதோ மற்றான் தானே...அவனும் உங்கள் இரத்தம் தான்... இதை அங்குள்ள இளைஞர்களிடம் சொல்லுங்கள்... தினமும் சென்றியில் கால் கடுக்க நின்று சோதனை முடித்து பள்ளிக்குப் போய் படிக்கிறவன்... சகோதரம் என்றும் பார்க்காம பிஞ்ச செருப்பால அடிப்பான்.... ஒருக்கா விமானம் ஏறினா 10 மணித்தியாலத்தில் உங்கள் காலடியில் இருப்பான் உங்கள் உறவு....!
உங்களை எல்லாம் எப்படி உங்கள் பெற்றோர் இங்கே அனுப்பி வைத்தனர்...சிந்தித்துப் பாருங்கள்.... காணி பூமியை விற்றோ அடகு வைத்தோ....இன்றிக் கடன் வாங்கியோ.... அன்று பெற்ற அந்தப் பணம் உங்கள் வாழ்நாளில் எந்தளவு உழைத்தாலும் அவை அதற்கு ஈடாகாது...அதற்காய் தானும் நீங்கள் தாயகத்துக்கு உதவ வேண்டும்....அது உங்கள் கடமை....எங்கள் கடமையல்ல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

