11-19-2004, 10:21 AM
thaiman.ch Wrote:குருவிகளே நீங்கள் எந்த யுகத்தில் இருக்கிறீா்கள் என்று எமக்கு விளங்கவில்லை. நீா் என் கருத்து சொல்ல வருகிறீா் என்று உமக்கே குழப்பமாக உள்ளது. முரளிதரன் முரளிதரன் என்கிறீா்களே அவா் எமது நாட்டு விடுதலைக்கு புரிந்த பங்குதான் என்ன? அவரைப்போல் நான் ஒரு உலகப்புகழ் பெற்ற வீரனாக இருந்தால் அந்த புகழை பயன்படுத்தி எனது நாட்டை (தமிழீழம்) உலக அரங்கில் முன் நிறுத்த உதவி புரிந்திருப்பேன். எங்களிற்கு நாடு இல்லை என்று சொல்கிறீா்கள் முதலில் அதை பெற வேண்டும் என்றும் சொல்கிறீா்கள். குருவிகளே முரளிதரன் போராட்டத்தை அதரித்தாலும் அதை எப்படி புலிகள் ஏற்றுக்கொள்வது? அவா் சிறீலங்கா அணியில் அல்லவா விளையாடுகிறாா். சிறீலங்கா என்ன உங்களுடைய நாடா? இது எப்படி இருக்கு என்டா கதிா்காமா் தமிழன் என்டதாலா அவா் எங்கட நாட்டில அதிபா் பதவிக்குப் போட்டியிட முடியும் என்ட மாதிரி இருக்கு. முரளிதரனின் முற்சிக்கு வாழ்த்துக்கள்.
குருவிகளே நீங்கள் விடுதலைப்புலி உறுப்பினா்கள் வெளிநாடுகளில் ஆற்றிய உரை கேட்பதில்லை என்று நினைக்கின்றேன். புதுவை இரத்தினதுரை அவா்கள் சென்ற ஆண்டு சுவிசிற்கு வந்த போது எமக்கு சொன்னது, உங்களிற்கு ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கித் தருகிறோம் நீங்கள் அங்கு வந்து போராட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. குருவிகளே இது புதுவை இரத்திணதுரை சொன்னது. நம்பிக்கை இல்லாவிட்டால் அவரை நேரில் காணும் போது நீங்கள் அவரை கேளுங்கள்.
குருவிகளே நீங்கள் அகதிமுகாம்கள் பற்றியும், சிறையில் வாடுகின்ற இளைஞா்கள் பற்றியும் பேசுகிறீா்கள் அவா்களிற்கு நீங்கள் என்ன செய்தீா்கள்???
ஒன்று புரிகிறது,,, நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது... இல்லாத ஒன்றுக்காய் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள் என்று கடவுளைப் காட்டிக் கேட்பது போல... இல்லாத தமிழீழத்திற்காய் நாம் இருவரும் கருத்துப் பகர்ந்து ஆகப் போவதென்ன... தமிழீழம் நாளை விடியும் என்று பாடிய புதுவையை கேட்க வேண்டும்...யோவ் நீ அந்த நாளையை ஐயா சொன்னா என்று.....இன்னும் தமிழீழம் விடியக் காணேல்ல என்று... கொஞ்சம் கற்பனை உலகில் இருந்து நிஜ உலகுக்கு வாருங்கள்... முரளியா நீங்களா யதார்த்தமாகச் செயற்படுகிறார்கள் என்று புரியும்...!
சும்மா நாலு கோவில் கும்பாவிசோகமும் செய்து ஒரு இரண்டு விளையாட்டு மைதானமும் கட்டின உடன தமிழீழம் மலர்ச்சி பெறப் போவதில்லை...அதற்குச் செய்ய நிறைய இருக்கு... அது வெறுமனவே வாயாலும் சொல்லாலும் ஆகாது.... செயலால் எல்லோரினதும் பலத்தால் ஒற்றுமையால் ஆக வேண்டியது...!
ஒருவிசயம்... உங்களை விட எல்லாம்.... கதிர்காமர் புத்திசாலி....அவரை பதவியில் இறக்கிய சந்திரிக்கா புத்திசாலி... புலம் புலம் என்று கத்துகிறீர்களே... 98 வரை புலத்தில் பல தேசங்களில் பறந்த புலிக் கொடியை இன்று காணக் கிடைக்கவில்லையே...தடை....காரணம் யார்...உது தமிழீழத்துக்கு நல்ல சகுனம் அல்ல...முதலில் உங்களைத் திருத்தி அதை எடுக்க முயலுங்கள்... அண்மையில் பிரித்தானிய ஒலி/ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளி பரப்பிய நிகழ்சியின் பிரகாரம் தமிழ் இளைஞர்கள் வன்முறைவாதிகள் என்பதே பொருள்....இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டிக்கிடக்கு...நீங்கள் தாயகத்துக்குச் செய்த பேருதவிகளில் இவையும் அடங்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

