11-19-2004, 03:23 AM
இது எங்கும் உருவாகக்கூடிய பிரச்சினை. ஆனால் பொருளாதார வசதிகள் நிறைந்த ஆயுத சுதந்திரம் நிறைய இருக்கின்ற நாடுகளில் இவை பேரிழப்புக்களை ஏற்படுத்தி விடும்.
பாலியல் முதிர்ச்சி உள்ளவர்கள் எல்லோரும் நல்ல பெற்றோர்களாகி விட முடியாது. இளைய தலைமுறையினரிற்கும் பெற்றோர்களிற்கும் இருக்கின்ற பாலம் பாசப்பிணைப்பு உளுத்துப்போய்விடுவதாலும் இந்த Gangster கலாச்சாரம் உருவாகி விடுகின்றது.
எண்பதுகளில் இலங்கையைவிட்டு மேற்கத்திய நாடுகளிற்கு இளைஞர் யுவதிகளாக சென்றவர்களின் குழந்தைகள்தான் இன்று மேலே பேசப்படுகின்ற குளப்படிக்கார குழுவினர் என்பது சாதாரண வருடக்கணக்கில் புரிந்து விடும்.
எங்களின் கலாச்சாரம் பொதுவாக ஒரு கட்டுப்பாட்டு அவதானிப்புக் கலாச்சாரமாகும். அங்கே போகாதே இங்கே போகாதே அவனுடன் பழகாதே இவனுடன் பழகாதே இரவில் திரியாதே. ஏன் என்று கேள்வி கேட்டால் பிடறி மின்னுகின்ற பெற்றோரில் இருந்து முறைத்துப்பார்க்கும் பெற்றோர் என்று பல வகை.
குழந்தைகளுடன் நண்பர்களாகப்பழகும் பெற்றோர்களும் எம்மண்ணில் இருக்கின்றார்கள் இந்த சிறிய வாதம் அவர்களைப்பற்றியது அல்ல. அவர்களின் குழந்தைகள் இந்த குளப்படி குழுக்களிலும் இல்லை என்று நான் நினைக்கின்றேன்.
சந்தியில் நின்றால் யாராவது அவதானித்து வந்து வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவார்கள் அதன்பிறகு என்ன மங்களம்தான் ஆகவே ஒரு விதமான பயத்தில்தான் பெரும்பாலான குழந்தைகள் வளர்கின்றன அவர்களிடம் அவர்களை நிர்வகிக்கும் சுயநிர்ணய உரிமைையை பெற்றோர்கள் வழங்காமல் தண்டனையினால் கட்டுப்பாட்டில் வைககும் பெற்றோர்களே அதிகம்.
இப்படியான கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றதும் சிலர் திடீரென கிடைத்த சுதந்திரத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரியாமல் குடிபோதை அடிதடியில் மாட்டுப்பட்டு அல்லøபட்டார்கள் மற்றயவர்கள் அøலும் பகலும் உழைத்து ஊருக்கனுப்பினார்கள்.
ஆரம்பத்தில் பொதுவாக பல இளைஞர்கள் அந்த அந்த நாட்டு வெள்ளைக்காரப் பெண்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் இளமைத்துடிப்படங்கிக்கொண்டு போகவும் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்தார்கள்.
ஆணும் பெண்ணும் உழைத்தால்த்தான் ஓரளவு வாழலாம் என்ற சூழலினால் பிள்ளைகளுடன் மினக்கெடும் நேரமும் இந்தப் பெற்றோரிடம் இல்லாது போக விரிசல் பெரிசாகி இடையில் பள்ளத்தாக்குகள் உறவில் தோன்றி விட பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளை கை கழுவி விட்டுவிட்டார்கள்.
சிறியவர்களாக இருக்கும் வரை இவர்களின் பெற்றோர்கள் ஊரில் இவர்களை எப்படி அடித்து அடக்கி வைத்தார்களோ அதே முறையை இவர்களும் மேற்கொண்டு அடக்கிவைத்தார்கள்
பெற்றோர்களின் கலாச்சாரமும் பிள்ளைகளின் கலாச்சாரமும் வேறுபாடுகள் கொண்டிருப்பது வழமை அது மேற்கத்திய நாடுகளில் பூதாகரமான வேறுபாடுகளுடன் மாறுபட்டுக் கொண்டதும் இந்தப்பிள்ளைகள் கட்டாக்காளைகளாகத் திரிவதற்கு இன்னும் ஒரு காரணம் ஆகும்.
அன்புடன் Jaya