11-19-2004, 02:19 AM
இவர்கள் வாங்கும் தளபாடங்கள் தயாராகி பலகாலங்கள்
இவர்களை தாங்கும் தனபாலர்கள் சதிகாரக் கொலைகாரர்கள்
இராணுவ பலமுள்ள வளர்முக நாடுகளில் இருந்து வளருகின்ற நாடுகள் வரை எங்களிற்கு பூரண விடுதலை கிடைப்பதை விரும்பவில்லை. விழிப்புணர்வு குறைந்த மக்களை சுரண்டுவது சுலபம். பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையில் பெருமளவில் முதலிட்டு எங்களின் இயற்கை வளத்தையும் மக்களின் உழைப்பையும் மிகவும் மலிவு விலையில் வாங்கிப் பெரும் இலாபம் அடையத்துடிக்கின்றன.
இதனால்த்தான் யசூஷி அகாஷி எங்களின் அமைதியில் ஆழமான அக்கறை கொண்டிருக்கின்றார். யப்பானியர்கள் முன்னரைப்போல வேலைப்பிரியர்கள் அல்லர் குஷியான வாழ்க்கை வாழ நினைக்கின்றார்கள் அவர்களிடம் பணம் இருக்கின்றது ஆகவேதான் இன்று தெற்கில் உள்ள காற்றோட்டமான கடற்கரைகளில் உள்ள காணிகளை அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றார்கள்
ஆங்காங்கே பெரிய விடுதிகள் அமைத்து அதில் மண்ணின் மைந்தர்களைக் கூலிகளாக வேலைவாங்கி வரும் இலாபத்தில் தாங்கள் சந்தோசமாக வாழ திட்டம் தீட்டுகின்றார்கள். யப்பானில் குழந்தைகள் பிறக்கின்ற விகிதம் குறைந்து கொண்டு போகின்றது முதியோரின் எண்ணிக்கை கூடுகின்றது இந்த முதியவர்கள் சேமித்த பணங்களை எங்களின் நாடுகளில் விலை குறைவாக இருக்கின்ற போது நிலங்களை வாங்கி முதலீடு செய்து விட்டு இன்னும் பத்து வருடங்களில் பல மணங்கு விலைக்கு விற்று பணமீட்டி விடுவார்கள்.
எங்களின் நாடுகளில் அவர்களின் கார்களின் உதிரிப்பாகங்களை மட்டும் செய்து கொள்வார்கள் எங்களின் நாட்டை ஊத்தையாக்கி சூழலை மாசு அடைய செய்து வருகின்ற சமுதாயம் புற்று நோய் இழுப்பு ஆகிய நோய்களால் அல்லலுற வைப்பார்கள். முழுமையாக ஒரு வாகனத்தை செய்கின்ற தயாரிப்பு நிலையத்தை ஒருபோதும் உருவாக்க மாட்டார்கள் காரணம் நாங்கள் அவர்களின் பொறிமுறையை தொழில்நுட்பத்தை அறிந்து விடுவோம் என்பதற்காக எங்களை ஒரு மட்டத்தில் வைத்திருக்கவே விரும்புவார்கள்.
இந்தக்கொள்கை இந்தியாவில் இருந்து இண்டியான உள்ள அமெரிக்கா வரை இருக்கும் வரை ஒவ்வொரு தமிழனும் இவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அன்புடன் Jaya