11-18-2004, 09:49 PM
Quote:மனித குண்டுத்தாரியைக் கூட்டி வந்த பெண் டக்ளசுடன் இரகசியத் தொடர்புடையவர் - கனடா ஈழநாடு
ஜ நமது நிருபர் ஸ ஜ வியாழக்கிழமை, 18 நவம்பர் 2004, 9:35 ஈழம் ஸ
கடந்த சில மாதங்களிற்கு முன்பு கொழும்பில் இடம்பெற்ற மனித குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பெண்ணைக் கூட்டி வந்தவர் டக்ளசுடன் இரகசிய உறவுள்ளவர் என்றும் மாதாந்தம் அவருக்கு 7,000 ரூபாய்களை டக்ளஸ் வழங்கி வந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததாக மேற்படி பத்திரிகையின் கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஊடகங்களிற்கு கசியாத பல தகவல்களை உள்ளடக்கியுள்ள மேற்படி செய்தியில், மேற்படி பெண் டக்ளசுடன் இரகசியத் தொடர்புடையவர் என்றும் அவரே மனித குண்டுத்தாரியை கூட்டிவந்திருந்தார் என்றும் அவர்கள் நீர்கொழும்பிலுள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு அன்றிரவு செல்வதற்கே திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை,
சுமார் 400ல் இருந்து 500 உறுப்பினர்களையே கொண்டுள்ள டக்ளஸ் அரசாங்க இராணுவத் துணைப்படையில் 1,100 பேருக்கு மேல் உள்ளதாகக் கூறி அவர்களிற்குரிய சம்பளத்தினை அரசிடமிருந்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளதோடு, மாதாந்தம் நபரொருவருக்கெனப் பெறப்படும் 10,000 ரூபாய்கள் சம்பளவீதம் மாதமொன்றிற்கு பல லட்சக்கணக்கான ரூபாய்கள் டக்ளஸால் கையாடப்படுவதாகவும் அப்பத்திரிகையின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அரச இராணுவத் துணைப்படையின் அங்கமான ஈ.பி.டி.பி. உறுப்பினர்களிற்கான சம்பளம் ஈ.பி.டி.பி. மூலமே பட்டுவாடாச் செய்யப்படுகிறது என்றும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. அத்தோடு கொழும்பில் தன்னுடன் தொடர்புடைய பெண்களிற்கு டக்ளஸ் வீடுகள் வாங்கிக் கொடுத்தமை பற்றிய விபரமான செய்தியும் அதில் இடம்பெற்றுள்ளது.
நன்றி புதினம்.
.......... இவையெல்லாம் என்னத்தை கூறிச் செல்கின்றனவென்றால் .
1) தற்கொலைக் குண்டு வெடிப்பு மூலம் ஒரு மிகப் பெரிய பப்ப்ளிசிற்றி ஸ்ரன்ட் திட்டமிட்டு அரங்கேறியிருக்கிறது? அதன் மூலம் வெளிநாட்டு இராஜிதந்திரிகளின் பார்வை, ஊடகங்களின் பார்வையை, ... பெறுவதற்கான முயற்சியே இதுவாகும்!!!
2) ஈ.பி.டி.பியில் எழுந்துள்ள உள்ளக முரண்பாடுகள், மர்மக் கொலைகள், உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தப்பி ஓடுவது, டக்லசினால் கையாளப்படுவதாகக் கூறப்படும் நிதி மோசடிகள், மகேஸ்வரி வேலாயுதத்தின் பெயரால பல கோடிக்கணக்கான சொத்துக்கள் கொழும்பிலும் லண்டனிலும் இந்தியாவிலும் வாங்கப்பட்டதாக வெளியான உறுதியான செய்திகள் போன்றவற்றிலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவும் இதை மேற் கொண்டிருக்கலாம்!!!
எப்படியிருப்பினும் ஓர் அப்பாவிப் தமிழ்ப் பெண்ணின் உயிர், அப்பெண்ணிற்கே தெரியாமல் பறிக்கப்பட்டிருப்பதாகவே தோண்றுகின்றது. பொலிஸ், இரானுவம், ஈ.பி.டி.பியினரால் சூழப்பட்ட அச்சம்பவம் நடைபெற்ற கட்டடத்தினுள் போவோர் வருவோரெல்லாம் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அணுவணுவாக சோதனை செய்யப்பட்டே செல்ல அனுமதிக்கப்படுவர்? அப்படியிருக்க புது விதமான குண்டு பொருத்தப்பட்ட உடையுடன் அந்த தமிழ்ப் பெண் சென்றாரென்பது திட்டமிட்டு அரங்கேறிய ஒரு நாடகத்தின் கருவே? நாடகத்தை உண்மையாக்குவதற்காக சில பொலிசாரும் கொல்லப்பட்டிருக்கிராரகள்!!!! இது போன்ற சம்பவங்கள் உலக நாடுகளில் ஏற்கனவே பல அரங்கேறியுள்ளன!! உதாரணத்திற்கு ... எண்பதுகளில் லிபியா நாட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடாத்துவதற்காக அமெரிக்க-இங்கிலாந்து புலனாய்வுப் பிரிவினரால் நண்டனிலுள்ள லிபிய தூதுவராலய முன்பாக இங்கிலாந்து பொலிசார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்! இக்கொலை தூதுவராலயத்தினுள்ளிருத்து தான் மேற்கொள்ளப்பட்டதாக கூறி தட்சர்-றீகனினால் லிபியா மீது பாரிய விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது அதன் விளைவாக கேணல் கடாபியியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது!! ஆனால் பல வருடங்களின் பின்பே சனல் 4 என்ற தொலைக்காட்சியில் சகல ஆதாரங்களுடன் இக்கொலையானது பிரித்தானிய-அமெரிக்க உளவுப் பிரிவினரால்தான் மேற் கொள்ளப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டது குறிப்படத்தக்கது!! ..... அதே போலத்தான் சில காலத்திற்குப் பின் தான் இத்தற்கொலை குண்டுவெடிப்பு நாடக உண்மை வெளிவத் தொடங்கியுள்ளது.
எது எப்படியிருப்பினும் இவற்றுக்கெல்லாம் விடுதலைப் புலிகள் வெகுவிரைவில் முடிபு கட்ட வேண்டுமென்றே சகல ஈழ்த்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இப்படியான களைகளை காலம் தாழ்த்தாது களந்தெறிய வேண்டும்.
" "

