11-18-2004, 09:06 PM
வணக்கம் குருவிகள்
குருவிகளே நீங்கள் சொல்கிறீா்கள் நாங்கள் மாவீரா்களின் பெயரை பயன்படுத்தி இங்கே வந்தோம் என்று. நீங்கள் சொல்லவது நிறையப் பேருக்கு இங்கே போருந்தும். ஆனால் குருவிகளே ஒன்றை மறந்து விட்டீா்களே. நாங்கள் இங்கு அழைத்து வரப்பட்ட போது எங்களிற்கு வயது 6. எமது நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. நீங்கள் எப்படி எங்களை குற்றம் சொல்கிறீா்கள்? எங்களை அழைத்து வந்த பெற்றோா்களை தான் நீங்கள் குற்றம் சொல்ல வேண்டும். பொற்றோா்கள் என்ன இளைஞா்களா? இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள் குருவிகளே நாங்கள் விரும்பி இங்கு வரவில்லை. இப்பொழுது நாங்கள் எங்கள் நாட்டிற்கு வரலாம். ஆனால் இப்படி வந்து என்ன செய்யப்போகிறோம்? எமது நாட்டிற்கு பாரமாக தான் இருப்போம். எனவே தான் நாங்கள் ஒரு தொழிற்கல்வி படித்து விட்டு அதை எமது நாட்டிற்கு பயன்பட செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
நாங்கள் பிரதேசவாதிகள் இல்லை குருவிகள். நீங்கள் தான் அதை இங்கே கொண்டு வந்தீா்கள். நாங்கள் தமிழீழ விளையாட்டுத்துறைக்கு நிதி உதவி மட்டுமே செய்வதாக உறுதியளித்தோம். அந்த மைதானத்தை எங்கே எப்படி கட்டுவது என்பது அவா்கள் தீா்மானித்தது. இப்பொழுது விளங்குகிறதா இன்றைய இளைஞா்கள் எப்படி சிந்திக்கின்றாா்கள் என்று?
இன்று சிறையில் எத்தனை தமிழ் இளைஞா்கள் வாடுகிறாா்க்கள் என்று எமக்கு தெரியாது. உங்களிற்கு வடிவாக தெரியும். அப்படியென்றால் நீங்கள் ஏன் அவா்களை வெளியில் கொண்டு வர முயலவில்லை? அவா்களை பற்றி வெறுமனே கவலைப்பட்டு ஒரு பலனும் இல்லை. அவா்களை வெளியில் கொண்டு வர நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீா்கள்? சொல்லுங்கள் அதையும் இளைஞா்களாகிய நாங்களே உங்களிற்காக எமது உறவுகளிற்காக செய்கிறோம்.
வெளிநாட்டில் உள்ள எங்களைப் பற்றி நீங்கள் இப்படியெல்லாம் பேசுகிறீா்களே. நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இங்கு நான் வாழும் சுவிசில் விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர வேறு எந்த ஒரு அமைப்பையும் நாங்கள் ஆதரப்பதில்லை. ஆனால் இன்று தமிழீழத்தில் பிளட் அமைப்பு எப்படி தான் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது? அதில் எப்படி உங்களைப் போன்ற இளைஞா்கள் சோ்ந்தாா்கள்? ஏன் நீங்கள் அவா்களை தடுக்கவில்லை?
இதைவிட இங்கே சில தவறுகளை செய்தாலும் எமக்கு அவா்களை விட நாட்டுப்பற்று அதிகம் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை.