11-18-2004, 01:50 AM
thaiman.ch Wrote:எங்களிற்கு சந்தா்ப்பம் நிறையவே உள்ளது மீரா. நாங்களும் போராட போய்விட்டால் இந்த மாவீரா்களின் கனவை யாா் நினைவாக்குவது? எமது தேசியத் தலைவரே சொல்லியிருக்கிறாா். புலம்பெயா்ந்த மக்கள் இல்லாவிட்டால் எமது போராட்டம் எப்பவோ நசுக்கப்பட்டிருக்கும் என்று. நாங்கள் ஏதாவது ஆக்கபூா்வமாக செய்ய விரும்புகின்றோம். நீங்கள் எமது இளம் சந்ததியின் பிழைகளை சுற்றிக்காட்டாமல் எம்மை உற்சாகப்படுத்துங்கள் எம் நாடு இன்னுமொரு வல்லரசாக உருவாகும். நீங்கள் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசுகிறீா்கள். அமெரிக்காவில் மேற்குலக கலாச்சாரம் இல்லையா? ஏன் இன்று நான் வசித்துக்கொண்டிருக்கும் சுவிசில் மேற்குலக்கலாச்சாரம் இல்லையா? இங்கு எல்லாம் மேற்குலக்கலாச்சாரம் உள்ளது. பிறகு எப்படி இந்த நாடுகள் எல்லாம் உலகப் புகழ் பெற்றன?
ஒன்று வடிவாக விளங்கிக்கொள்ளுங்கள் மீரா ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் கலாச்சாரத்தில் தங்கவில்லை. அதன் உழைப்பும், சாதிக்கத்துடிக்கும் இளைஞா்களும் தான் முக்கிய காரணம்.
நீங்கள் புலம்பெயர்ந்ததே மாவீரர்களைக் காட்டித்தானே... அன்றே மக்கள் அனைவரும் ஒரு சேர இணைந்து போராடி இருந்தால் இன்று தமிழீழ தேசத்தில் நாம் இருந்திருப்போம்...இவ்வளவு இழப்புக்களை சந்தித்திருக்கத் தேவையில்லை...!
இன்றும் அதே போராட்டத்தைக் காட்டி சுகபோகம் காண்பவர்கள் தொகை எத்தனை... இவர்கள் தானா தமிழீழ விடுதலைக்காய் உழைப்பவர்கள்...! தாயகம் என்றால் வெக்கை என்போரும் வசந்தகாலச் சுற்றுலாச் செல்வோரும் தானா... தாயகத்தை நேசிக்கும் பெருமக்கள்....! கெஞ்சி கூத்தாடிக் கேட்டால் பிச்சை போடும் அளவில் தான் உங்கள் நிதி உதவி... அன்று துன்பத்தின் மத்தியிலும் தங்கப் பவுண்களாய் கொடுத்ததை தலைவரோ எவருமோ இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்....!
அதுப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கவில்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்...!
இன்று அதே மக்கள் நிர்கதியாய் ஏன் நிற்கின்றனர்... உங்கள் பணத்தை எதிர்பார்த்து ஏன் நிற்கின்றனர்... நீங்கள் ஆட்ட ஆடும் நிலையில் ஏன் அந்த மக்கள் இருக்க வேண்டும்...அதுகூட அம்மண்ணைப் பலவீனப்படுத்தும் அது தெரியுமா.... இதைச் செய்வது எதிரிக்கு மிக இலகு....! அந்த மக்கள் தங்கள் காலில் தாங்கள் நிமிர்ந்து நிற்க வழி செய்வதே தகுந்தது அவசியம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

