07-28-2003, 10:58 AM
நன்றி அலை இக்கதையை நாமும் படிக்க வழியமைத்தமைக்கு.
இக்கதைபடித்த என்விழியிருந்த வழிந்த துளிகள் கீழ்வரும் வரிகள்.
விருப்புகள் மறந்து இருப்பெல்லாம்
அவனுக்கானதாய்.....
உச்சவலியில் உயிர் வலித்தாலும் - அவள்
ஈடுகட்டியே ஆகவேண்டிய இக்கட்டில்....
உணர்வுகளும் , உயிரின் வலிகளும்
மரத்து அவள் பிணமாய்....
'இனிதான உறவாம் இல்லறம்"
சொன்னோர் வாய்களுக்குச்
செருப்பால் அடிக்க வேண்டும்.....
இங்கொருத்தி இறவாமால்
அணுவணுவாய் இறந்து கொண்டிருக்கிறாளே.....
என்ன சொல்வோம் சமூகமே.....?
ஏதாவது இன்னுமிருக்கிறதா....?
சாத்திரம் , சமயம் , சம்பிரதாயம் , சடங்கு
இன்னும் எத்தனையுள்ளதோ
அத்தனையையும் சொல்லி முடிப்போமே....
'பெண்ணே உன்னை வணங்குகிறோம்"
பெரிதாய் ஒருவார்த்தையால் புதைத்து
எஞ்சியிருக்கும் உயிரையும்
எடுத்து விடுவதில்தானே - நாம்
வல்லோராய் எல்லோரும்.
அதையும் செய்வோம் - ஏனெனில்
நாங்கள் பெண்ணை தெய்வமாய் பூஜிப்போர்.
28.07.03.
இக்கதைபடித்த என்விழியிருந்த வழிந்த துளிகள் கீழ்வரும் வரிகள்.
விருப்புகள் மறந்து இருப்பெல்லாம்
அவனுக்கானதாய்.....
உச்சவலியில் உயிர் வலித்தாலும் - அவள்
ஈடுகட்டியே ஆகவேண்டிய இக்கட்டில்....
உணர்வுகளும் , உயிரின் வலிகளும்
மரத்து அவள் பிணமாய்....
'இனிதான உறவாம் இல்லறம்"
சொன்னோர் வாய்களுக்குச்
செருப்பால் அடிக்க வேண்டும்.....
இங்கொருத்தி இறவாமால்
அணுவணுவாய் இறந்து கொண்டிருக்கிறாளே.....
என்ன சொல்வோம் சமூகமே.....?
ஏதாவது இன்னுமிருக்கிறதா....?
சாத்திரம் , சமயம் , சம்பிரதாயம் , சடங்கு
இன்னும் எத்தனையுள்ளதோ
அத்தனையையும் சொல்லி முடிப்போமே....
'பெண்ணே உன்னை வணங்குகிறோம்"
பெரிதாய் ஒருவார்த்தையால் புதைத்து
எஞ்சியிருக்கும் உயிரையும்
எடுத்து விடுவதில்தானே - நாம்
வல்லோராய் எல்லோரும்.
அதையும் செய்வோம் - ஏனெனில்
நாங்கள் பெண்ணை தெய்வமாய் பூஜிப்போர்.
28.07.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

